சிற்றுண்டி வகைகள்

சம்பல் ரொட்டி

தேவையான பொருட்கள்

மைதா – 50 கிராம்
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 5
மிளகாய்த் தூள் – 3 மேசைக்கரண்டி
பூண்டு – 2
உப்பு – 10 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 5 மேசைக்கரண்டி

செய்முறை

* மைதா மாவுடன் வெண்ணெய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

* சின்ன வெங்காயத்தை அம்மியில் லேசாக தட்டி அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், பூண்டு சேர்த்து அரைக்கவும். (வெங்காயத்தை மையாக அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைக்கவும்). பிசைந்து ஊற வைத்த மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து நடுவில் அரைத்த விழுதை வைக்கவும்.

* அந்த மாவை மீண்டும் உருண்டையாக உருட்டிக் கொண்டு சப்பாத்தி கல்லில் வைத்து போளி செய்வது போல் சற்று தடிமனாக தேய்க்கவும். பின்பு தோசைகல்லில் எண்ணெய் தடவி தேய்த்த ரொட்டியை போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

* சுவையான சம்பல் ரொட்டி தயார்.
f4118f6c 0bef 4cd6 b549 78c6d7bd86d1 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button