24 1448361969 rava appam
சிற்றுண்டி வகைகள்

ரவா அப்பம்

மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, அதே சமயம் சற்று சுவையான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ரவா அப்பம் செய்து கொடுங்கள். இந்த அப்பமானது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது. மேலும் செய்வதற்கு எளிமையாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த ரவா அப்பத்தை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


24 1448361969 rava appam
தேவையான பொருட்கள்:

ரவை – 1/2 கப்
கோதுமை மாவு 1/4 கப்
மைதா – 1/4 கப்
சர்க்கரை – 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
சோடா உப்பு – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ரவையைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு மணிநேரம் ஆன பின்னர் அதில் கோதுமை மாவு, மைதா மற்றும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி ஓரளவு கெட்டியான மாவு போல், கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடடா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், ரவா அப்பம் ரெடி!!!

Related posts

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

nathan

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

nathan

புத்துணர்ச்சி தரும் சாத்துகுடி ரைதா

nathan

பிரெட் வெஜ் ஆம்லெட்

nathan

சுவையான பொரி விளங்காய் உருண்டை

nathan

ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan

மழைக்காலத்தில் வீணாகிய சாதத்தில் சுவையான வடை செய்வது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan

பிரெட் ஸ்விஸ் ரோல்

nathan

சுவையான தக்காளி தோசை சாப்பிட ஆசையா? கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமா?

nathan