மனைவி அமைவதெல்லாம் அவரவர் செய்த புண்ணியம் என்பார்கள். ஆனால், மனைவியே ஓர் வரம் என்பது மிக சிலருக்கு மட்டுமே தெரியும். மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகிறார்கள்.
சிலரின் மனைவியை பார்க்கும் போது நமக்கே பொறாமையாக இருக்கும். ஏறத்தாழ நடிகை சுவலட்சுமி மாதிரி முகத்திலேயே அமைதி, பொறுமை, தெய்வ கடாட்சம் தெரியும்.
அட, இப்படி ஒரு மனைவி நமக்கும் கிடைப்பார்களா என ஏங்குவார்கள். இப்படிப்பட்ட அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் ஏழு விஷயங்கள் பற்றி இனி காணலாம்…
செயல் #1
பொறுமை! பெரும்பாலானோரிடம் இல்லாத ஒன்று இந்த பொறுமை தான். ஆண்களிடம் இதை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை!
செயல் #2
எல்லையற்ற காதல்! சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள்.
செயல் #3
நேர்மை, விசுவாசம்! மனதளவில் கூட ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. உறவு சார்ந்து மட்டுமில்லாது. கணவனுக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டார்கள். தான் செய்யும் எந்த ஓர் செயலும் கணவனை பாதித்துவிடக் கூடாது என மிக கவனமாக இருக்கிறார்கள்.
செயல் #4
மன்னிப்பு! அன்பார்ந்த மனைவி, கணவன் தவறு செய்தால் திட்டும் முன்னர், மன்னிக்கவும், அந்த தவறினால் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துக் கூறி மாற்ற முனைவார்கள்.
செயல் #5
தன்னலம் அற்ற சேவை! தன்னலமற்று, குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் மனைவி. எந்த ஒரு செயல்பாட்டிலும், குடும்பம், கணவன், குழந்தைகளுக்கு என்ன நல்லது என பார்த்து, பார்த்து செய்வார்கள்.
செயல் #6
சமநிலை! அறிவு ரீதியாக, உணர்ச்சி ரீதியாக சமநிலையில் செயல்பட கூடிய பெண்கள். இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே பார்வையில் கண்டு, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பெண்கள் இவர்கள். மன அளவில் கணவனுக்கு பெரியளவில் உறுதுணையாக இருப்பார்கள்.
செயல் #7
சுதந்திரம்! தன் கணவனின் நிலையை கண்டறிந்து, எது வேண்டியது, எது வேண்டாதது என புரிந்து செயல்படக் கூடியவர்கள். தங்கள் வாழ்க்கையின் சுதந்திரத்தை கெடாமால் பார்த்துக் கொள்ளும் வீட்டு சாமி என கூறலாம். தன் சுதந்திரம் என்ன என்று அறிந்த பெண்களால் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும்.