28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
01 sukku malli coffee
ஆரோக்கிய உணவு

சளிக்கு இதமாக இருக்கும் சுக்கு மல்லி காபி

அக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும். உங்களுக்கு சுக்கு மல்லி காபி எப்படி செய்வதென்று தெரியாதா?

அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு சுக்கு மல்லி காபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Sukku Malli Coffee
தேவையான பொருட்கள்:

சுக்கு காபி பொடிக்கு…

சுக்கு – 1/2 கப்
மல்லி – 1/4 கப்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்

சுக்கு காபிக்கு…

தண்ணீர் – 2 கப்
சுக்கு காபி பொடி – 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி!!!

Related posts

அசைவ பிரியர்களுக்கு பகீர் செய்தி

nathan

பருவ மாற்றங்களுக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகள்!..

sangika

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

இதை தினமும் சாப்பிடுங்க : கொலஸ்ட்ராலுக்கு சொல்லலாம் குட்பாய்…!

nathan

தினமும் இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..!

nathan

soya beans in tamil – சோயா பீன்ஸ்

nathan

உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி

nathan

உங்களுக்கு தெரியுமா போலியான தேனை எப்படி கண்டறியலாம்?

nathan

காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை

nathan