ஆரோக்கிய உணவு

ஆண்மையை பாதிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

கருவுறுதல் என்பது தான் கர்ப்பத்திற்கு அடிப்படை; கருவுறுதல் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு ஆகும்; இந்த கனவை நிறைவேற்றி கொடுக்க கண்டிப்பாக ஆணின் ஆரோக்கியமான விந்து அணுக்கள் தேவை. எல்லா ஆண்களுக்கும் தங்கள் வடிவில் ஒரு உயிரை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆண்களின் இந்த ஆசையை நிறைவேற்றவும் ஆரோக்கியமான விந்து அணுக்கள் தேவை மற்றும் விந்து அணுக்களின் ஆரோக்கியம் அவசியம்!

இந்த பதிப்பில் ஆண்களின் ஆண்மையை பாதிக்கும் அதாவது ஆண்களின் விந்து அணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் என்னென்ன மற்றும் ஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றி படித்து அறியலாம்..!

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்!

ஆண்கள் அதிகமான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இந்த உணவுகள் ஆண்களின் உடலில் உருவாகும் விந்து அணுக்களின் ஆரோக்கியத்தை அழிக்க கூடியவை என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு குழந்தைக்கு தகப்பனாக வேண்டும் என்ற ஆசை உள்ள ஆண்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவும்; இந்த உணவுகளை தவிர்க்கவும்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

காற்று அடைக்கப்பட்ட பானங்கள்!

காற்று அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பான வகைகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும். இந்த பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் காற்று அடைக்கப்பட்டு அல்லது கார்பன் சேர்க்கப்பட்டு தயாரித்த குளிர்பானங்கள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அதிகம் கேடு விளைவிக்க கூடியவை. குறிப்பாக இந்த குளிர்பானங்கள் ஆண்களின் விந்து அணுக்களை அழிக்க காரணமாகலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

காஃபின் வேண்டாம்!

ஆண்கள் காற்று அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியது போன்றே அவர்கள் காஃபின் சேர்க்கப்பட்ட அல்லது காஃபின் அதிகம் உள்ள பானங்களை, காபி – டீ போன்றவற்றை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் இந்த பானங்கள் நிச்சயம் ஆண்களின் ஆண்மையை அழிக்கும் என்று நிரூபணமாகி உள்ளன; ஆகையால் ஆண்களே இந்த காஃபின் சேர்க்கப்பட்ட பானங்கள் வேண்டாமே!

ஜங்க் உணவுகள்!

அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆண்கள் அதிக அளவு பர்கர், பீட்சா போன்ற உணவுகளை, நடைபாதை தள்ளு வண்டிகளில் விற்கப்படும் உணவுகள் போன்றவற்றை ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் சேர்க்கப்படும் ஆரோக்கிய சீர்கேடு விளைவிக்கும் பொருட்கள் ஆண்களின் ஆண்மையை தாக்க கூடியவை.

ஜங்க் உணவுகள் என்று கூறும் பொழுது அதில் அதிகம் எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளும் அடங்கும்; ஆண்கள் இவற்றை உண்டு உடல் பெருத்தலும் கூட ஆண்மையின் சிதைவுக்கு காரணம் ஆகலாம்.!

 

மீன் மற்றும் இறைச்சி உணவுகள்!

சில மீன் மற்றும் இறைச்சி உணவுகள் ஆண்கள் உண்ண தகுந்தது அல்ல; ஆண்கள் கடைகளில், ஹோட்டல்களில் சென்று உண்ணும் பொழுது எந்த மீன், எந்த வகை இறைச்சி என்று அறியாமலேயே உண்டு விடுவார்கள். ஆனால், சில குறிப்பிட்ட மீன் வகைகள் அவர்களின் ஆரோக்கியத்தை சீர்குலைப்பதை அவர்கள் அறிந்து இருக்க மாட்டார்கள்.

 

மது மற்றும் புகை!

ஆண்கள் மது மற்றும் புகை பழக்கத்தை அதிகமாக மேற்கொண்டு வந்தால், அவர்களால் அப்பாவாக முடியாது; ஆண்களின் ஆரோக்கியத்தை அடியோடு அளிப்பதோடு மட்டும் இல்லாமல், ஆண்களின் ஆண்மையையும் இந்த பழக்க வழக்கங்கள் முற்றிலுமாக அழித்து விடக்கூடியவை. ஆகையால் ஆண்களே! இந்த மது மற்றும் புகை பழக்க வழக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க முயலுங்கள்; முற்றிலுமாக நிறுத்துவது கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது தான்!

இயற்கை வேண்டும்!

ஆண்கள் இயற்கை முரையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தான் உண்ண வேண்டும்; செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் கூட ஆண்களின் ஆரோக்கியத்தை சிதைக்க முக்கிய காரணமாக உள்ளன மற்றும் ஆண்களின் ஆண்மையை போக்க விடும் அளவுக்கு இவை வேதிப்பொருட்களின் வீரியம் நிறைந்து காணப்படுகின்றன.

மருத்துவ ஆலோசனை!

ஆண்கள் தங்களின் உடலில் ஏதேனும் ஆண்மை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால், அவர்கள் கண்டிப்பாக உடனே மருத்துவரை நாடுவது நல்லது. ஏனெனில் பெண்களின் உடலில் நிகழும் மாற்றங்கள் பல வழிகளில் வெளிப்பட்டு விடும்; ஆனால் ஆண்களின் உடலில் நடைபெறும் மாற்றங்களை நன்கு கூர்ந்து கவனித்து வந்தால் மட்டுமே புலப்படும்.

ஆண்கள் தங்கள் உடலில் எந்த ஒரு தேவையற்ற மாற்றத்தை காண நேரிட்டாலும், உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button