29.6 C
Chennai
Sunday, Jul 13, 2025
egetable Kootu Mixed Vegetable Kootu SECVPF
ஆரோக்கிய உணவு

சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் – 100 கிராம்,

புடலங்காய் – 100 கிராம்,
சுரைக்காய் – 100 கிராம்,
தேங்காய் துருவல் – 1 கப்,
நீர் பூசணிக்காய் – 100 கிராம்,
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி,
மிளகாய்தூள் – தேவையான அளவு,
பெரிய வெங்காயம் – 1,
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

செய்முறை:

காய்கள் அனைத்தையும் சமமான அளவில் நறுக்கிக்கொள்ளுங்கள்.

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

தேங்காயை அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பும், மிளகாய்தூளும் சேர்த்து கிளறவும்.

காய்களில் உள்ள நீர் போதுமானது. தண்ணீர் தனியாக சேர்க்க வேண்டியதில்லை.

கடைசியாக அரைத்த தேங்காயை சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து வைக்கவும்.

அடுத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கூட்டில் சேர்த்த பின்னர் இறக்கவும்.

சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு ரெடி.

Related posts

சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர்

nathan

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

nathan

சத்து நிறைந்த பழைய சாதம்

nathan

சுவையான கோதுமை மசாலா தோசை

nathan

பாதாமும்.. பக்க விளைவுகளும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

கம்பு, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது -எப்படி செய்வது தெரியுமா?

nathan

வாரத்திற்கு நான்கு நாள் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வயிற்றுப் புண்ணை நொடியில் குணமாக்கும் அதிசய மூலிகை பானம்….

nathan

உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன

nathan