e35ae670 14ea 4f59 aa4f c9da897f5364 S secvpf
சைவம்

உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

தேவையான பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
பிரியாணி இலை – 1
கடலை மாவு – 2 டீஸ்பூன்
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
தண்ணீர் – 1 1/2 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் அதில் தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து தனியாக வைக்கவும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் கடலை மாவு சேர்த்து பொன்னிறமாக கிளறி விட வேண்டும்.

• அதில் தயிர் கலவையை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். கலவையானது எண்ணெயில் இருந்து பிரியும் போது, அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

• பிறகு அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

• இறுதியில் அதில் கொத்தமல்லியைத் தூவி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெடி.
e35ae670 14ea 4f59 aa4f c9da897f5364 S secvpf

Related posts

காளான் பிரியாணி

nathan

பார்லி வெஜிடபிள் புலாவ்

nathan

பொடித்த மிளகு சாதம்

nathan

வாங்கிபாத்

nathan

தேங்காய்ப்பால் புளியோதரை

nathan

பக்கோடா குழம்பு

nathan

ஸ்பைசியான பன்னீர் 65 செய்வது எப்படி

nathan

சில்லி காளான்

nathan

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை

nathan