21 618e1ae7eb
ஆரோக்கிய உணவு

பல உபாதைகளிற்கு நிவாரணம் அளிக்கும் நீர்; இத்தனை நன்மைகளா?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அருமருந்தாக ஓமம் உள்ளதென பெரியவர்கள் கூறுவார்கள். ஓமம் விதைகளில் உள்ள ஆக்டிவ் என்சைம்கள், இரைப்பையில் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

வயிற்று வலி, வாயு விலகல், அஜீரணம் உள்ளிட்ட நாள்பட்ட வயிற்றுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓமம் விதைகள் உதவுகின்றன.

அதோடு குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஓமம் விதைகள் தீர்வு அளிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓமம் கலந்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:-

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறுப் பொருமல் நீங்க:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

அதோடு ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

 

புகைச்சல் இருமல் நீங்க:

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.

 

குழந்தைகளின் மந்தம்:

பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும்.

இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

 

நல்ல தூக்கமும், நல்ல பசியும்:

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும். பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

 

இடுப்பு வலியை போக்க:

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும் எனவும் சொல்லப்படுகின்றது.

Related posts

தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க – ஆபத்து

nathan

முருங்கைக்கீரை சாம்பார்

nathan

குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பவரா நீங்கள்? அதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

nathan

ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

nathan

உடலுக்குத் தேவை பொஸிட்டிவ் உணவுகளே!

nathan

காலை வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ரத்தச் சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் கருப்பு களி….

nathan

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடலாமா?

nathan