பொதுவாக ரோஜா ஒரு நறுமணமிக்க மலராகும். அலங்காரத்திற்கு மட்டும் ரோஜாவை பயன்படுத்தாமல் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு கூட நாம் ரோஜாவை பயன்படுத்த முடியும்.
இந்த ரோஜாப் பூவை பயன்படுத்தி வாசனை திரவியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ரோஸ் டீ தயாரிப்பிலும் பயன்படுத்த முடியும்.
அதிலும் ரோஜாக்களை பயன்படுத்தி தயாரிக்கும் தேநீரில் விட்டமின் சி, பாலிபினால்கள், விட்டமின் ஏ, பல்வேறு விதமான தாதுக்கள், நெரோல், ஜெரானியால், குர்செடின், பிற ஆக்ஸினேற்றிகள் காணப்படுகிறது.
இந்த ரோஸ் டீ நமக்கு நிறைய நன்மைகளை வழங்குகிறது. இந்த ரோஜா மொட்டுகளில் டீ போட்டு கிடைப்பதனால் நமக்கு எந்தவிதமான நன்மைகளை வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
எப்படி பயன்படுத்தலாம்?
ரோஜா இதழ்களை கழுவி சுத்தம் செய்து சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பூச்சிக் கொல்லிகள் இல்லாத ரோஜா இதழ்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
ரோஜா மொட்டுகளை தண்ணீரில் கழுவி பிறகு 1/2 மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் உலர்ந்த ரோஜா இதழ்களை போட்டு 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்க விட வேண்டும். 5-8 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
இதில் வேண்டுமானால் லாவண்டர் மற்றும் செவ்வந்தி போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம். வேண்டுமானால் சுவைக்கு லெமன் சேர்த்து கொள்ளுங்கள்.
நன்மைகள்
ரோஸ் டீ டிஸ்மெனோரியாவுக்கு உதவுகிறது. இது ஹார்மோன்களின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. கருப்பை பாதிப்பை குறைக்கிறது. மாதவிடாயின்போது அடிக்கடி ஏற்படும் மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் மனநிலை மாற்றங்களை நீக்குகிறது.
ரோஸ் டீ உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
ரோஸ் டீ அருந்துவது செல்களை ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து காக்க உதவி செய்யும். மேலும் சருமம் வயதாகுவதை தடுக்க உதவுகிறது.
ரோஸ் டீயில் லாவண்டர் நறுமணமும் சேர்த்து டீ காய்ச்சி குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும். இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பாக இந்த ரோஜா மொட்டைப் பயன்படுத்தி தயாரிக்கும் டீயைக் குடிக்கலாம்.
சூடாக ரோஸ் டீ குடிப்பது தசையை தளர்த்த உதவுகிறது. இதில் பாலிபினால்கள் காணப்படுகிறது. நோய் மோசமடைவதை தடுக்க உதவுகிறது.
ரோஜாப் பூ டீ உங்க இரைப்பை குடல் அசெளகரியத்திற்கு உதவுகிறது. இது குடல் பாக்டீரியாக்களை சமநிலைப்படுத்துகிறது. இது மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளை போக்க உதவுகிறது.
ரோஸ் டீ கல்லீரலை மேம்படுத்துவதிலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. இது இயற்கையான டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது உடலில் அதிகப்படியான நீர் தேங்குவதை தடுக்கவும்
பக்க விளைவுகள்
ரோஸ் டீயை அதிகமாக உட்கொள்வது உங்களுக்கு வயிற்றுபோக்குக்கு வழி வகுக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.