36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

உலர் திராட்சை மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் விற்றமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கல்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 20 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இந்த முறையைப் பின்பற்றலாம்.

இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

கறுப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லீற்றர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…கொழுப்பைக் கரைக்கும் கத்தரிக்காய்…!

nathan

தினசரி 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க சிறுநீரகங்களை பாதுகாக்க இந்த 7 உணவுகள் போதுமாம்..!

nathan

முடியின் பராமரிப்பிற்கு தக்காளி

sangika

சுவையான வாழைப்பழ முட்டை தோசை

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

nathan

ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகள்

nathan

மாதவிடாய் காலத்தில் நீங்க இதை கண்டிப்பா சாப்பிடவே கூடாது!

nathan

நிறை உணவு என்றால் என்ன?

nathan