23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ci 1520
ஆரோக்கிய உணவு

ஏன் நீங்கள் பழுப்பு அரிசி சாப்பிட வேண்டும்? கொலஸ்ட்ராலை நீக்குகிறது

நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக கச்சிதமாக வைக்க விரும்புகிறீர்களா. அப்போ நீங்கள் பயன்படுத்தும் வெள்ளை அரிசி உணவிற்கு பதிலாக பழுப்பு அரிசி உணவிற்கு மாறுங்கள்.

ஆமாங்க! நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசியில் அதிக அளவு ஸ்டார்ச், கார்போஹைட்ரேட் போன்றவைகள் உள்ளன. இவைகளின் அளவு பழுப்பு அரிசியில் மிகவும் குறைவே.

பழுப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்
எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பழுப்பு அரிசி ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

அது மட்டுமல்ல இந்த அரிசியில் இன்னும் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன.

இந்த பழுப்பு அரிசி ஒரு முழு தானிய உணவாகும். இந்த அரிசியில் மேல் உள்ள தோல் மட்டுமே நீக்கப்படுகிறது. ஆனால் வெள்ளை அரிசியில் ஏராளமான சுத்திகரிப்பு முறைகள் செய்யப்படுகின்றன. இதனால் அதிலுள்ள இயற்கையான நார்ச்சத்துகள், ஊட்டச்சத்துகள் போன்றவை குறைந்து விடுகின்றன.

எனவே நாம் இதுவரை பயன்படுத்தி வந்த வெள்ளை அரிசியை விட பழுப்பு நிற அரிசி ஏராளமான நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

சரி வாங்க. அதன் ஏராளமான நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயாபட்டீஸ் வராமல் தடுக்கிறது

டயாபட்டீஸ் ஒரு மெட்டாலிக் நோய். நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு போதுமான இன்சுலின் இல்லாமல் அதிகரித்து விடுவது தான் இந்த டயாபட்டீஸ். இந்த பழுப்பு அரிசியில் உள்ள பைடிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்றவை இரத்த சர்க்கரை அளவை குறைத்து டயாபட்டீஸைக் கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவுகிறது.

நச்சுக்களை வெளியேற்றுதல்

நமது உடலில் தினமும் சிறிது சிறிதாக நச்சுக்கள் கலந்து கொண்டு இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாங்க நாம் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள், சுற்றுச்சூழல் மாசுக்கள், சுற்றுப்புற கிருமிகள் இவைகள் நமது உடலில் நச்சுக்களை ஏற்றிக் கொண்டு இருக்கின்றன. நாம் நோயிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தினம் தினம் இந்த நச்சுக்களை வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பழுப்பு நிற அரிசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இயற்கையாகவே நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இதனால் எளிதில் நம்மை நோய்கள் அண்டாமல் காக்கிறது.

இதய நோய்கள் வராமல் தடுக்கிறது

தற்போது இதய நோய்களால் ஏற்படும் இறப்பு என்பது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிறைய நோய்கள் நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளைத் தாக்கி நம்மை அபாய நிலைக்கு இழுத்துச் சென்று விடுகின்றன. ஆனால் இந்த பழுப்பு அரிசி இதய இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புகள், கசடுகள் போன்றவற்றை நீக்கி இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. இதற்கு காரணம் அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது

பிறந்த குழந்தைக்கு சிறந்த உணவு என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான். ஏனெனில் தாய்ப்பாலில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. எனவே தான் இந்த பழுப்பு அரிசி உணவு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சிறந்தது. பால் சுரக்கும் ஹார்மோன்களைத் தூண்டி அதிகமான பால் சுரப்பை சுரக்கச் செய்கிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க

இன்றைய அவசர காலங்களில் ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடக்கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளையே தினமும் உண்கிறோம். இதன் விளைவாக, நமக்கு வாயுத்தொல்லை, வயிறு வீக்கம், வயிறு மந்தம், மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற ஏராளமான ஜீரண பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே இதைத் தவிர்க்க இந்த பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து நமக்கு உதவுகிறது. சீரண சக்தியை மேம்படுத்தி நமது வயிற்றில் உள்ள அமிலத்தை தூண்டி மேலே உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்கிறது.

அதிக கொழுப்பைக் குறைக்க

இப்பொழுது எல்லாம் அதிக கொலஸ்ட்ரால் நிரம்பிய நொறுக்கு தீனிகளைத் தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். இதன் விளைவு அதிகப்படியான கொழுப்பு நமது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நமது உள்ளுறுப்புகளுக்கு இரத்தம் சீராக பாய விடாமல் தடுத்து விடுகிறது. இதனால் ஹார்ட் அட்டாக் மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த பழுப்பு அரிசியில் உள்ள காமா அமினோ பியட்ரிக் அமிலம் நமது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை நீக்குகிறது.

புற்றுநோயிலிருந்து காக்கிறது

புற்றுநோய் என்பது இறப்பை கொடுக்கும் கொடிய நோயாகும். இவை தற்போது வயது வரம்பில்லாமல் எல்லாரும் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். நமது உடலில் உள்ள செல்களை புற்றுநோய் செல்களாக பெருக்கி நம் உடல் உறுப்புகளையே அழித்து விடுகிறது. ஆனால் இந்த பழுப்பு அரிசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை தடுத்து புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது.

மன அழுத்தத்தை சரி செய்தல்

நிறைய ஆராய்ச்சி தகவல்கள் என்ன சொல்கிறது என்றால் இந்த பழுப்பு அரிசி மன அழுத்தத்தை குறைக்கிறது. இதற்கு காரணம் இதிலுள்ள அமினோ அமிலங்களான குளுட்டமைன், கிளிசரின் மற்றும் காமா அமினோபியட்ரிக் அமிலம் போன்றவை நமது மூளையில் செரோடோனின் ஹார்மோனை சுரக்கச்செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது. அனிஸ்சிட்டி போன்றவை பிரச்சினைகளையும் களைகிறது.

எலும்புகளை வலுவாக ஆரோக்கியமாக்குகிறது

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் மட்டும் இந்த பழுப்பு அரிசியில் இல்லை. இதைத்தவிர இதில் நமது எலும்பின் வலிமைக்குத் தேவையான மக்னீசியம், கால்சியம் போன்ற பொருட்களும் அடங்கியுள்ளன. எனவே உங்கள் வயசான காலத்திலும் உங்கள் எலும்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இது உதவுகிறது. ஆஸ்ட்ரோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் காக்கிறது.

எனவே இந்த பழுப்பு அரிசியால் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை நாம் தினமும் எடுத்துக் கொள்வோம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா எல்லா நேரத்திலும் நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு தான்..!!

nathan

பாலை விட அதிக புரதச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு

nathan

மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

nathan

எருமைப் பால்! பசும் பால்- இரண்டில் எது குடிப்பது நல்லது?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! நோயில்லாத வாழ்வை உங்கள் குழந்தைகளுக்கு தர விரும்பினால் இந்த உணவுமுறைக்கு மாறுங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் வாழைத்தண்டு சாலட்

nathan

கோதுமை ரவையில் கருப்பட்டி பாயாசம் செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா இவ்வளவு நன்மை இருக்கா..?

nathan

சாப்பிட்ட உணவு ஜீரணமாகவில்லையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan