31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
201703291432071697 Women definitely need to do before going to sleep SECVPF
மருத்துவ குறிப்பு

தூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை

பெண்களே தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை கண்டிப்பாக செய்துவிட்டோமா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை
அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை செய்துவிட்டோமா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அடுத்த நாள் வேலைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கச் செல்லலாம்.

தினமும் தூங்கச் செல்லும் முன்பாக, முகத்தில் உள்ள மேக்கப்பை நிச்சயம் கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும்.

அதேபோல் நீங்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், அதை இரவில் கட்டாயம் நீக்கிவிட்டு, கண்களைக் கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். நீண்ட நேரங்களுக்கு லென்ஸ் அணிந்திருத்தல் கூடாது.

201703291432071697 Women definitely need to do before going to sleep SECVPF

இந்தியர்களாக இருந்தால், தங்கத் தோடு, மூக்குத்தி, மோதிரம், தங்க செயின்கள், வளையல் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவற்றைத் தூங்கச் செல்வதற்கு முன்பாக கழட்டி வைத்துவிடுவது நல்லது. சின்ன அணிகலனாக இருந்தாலும் சில சமயங்களில் எங்காவது குத்தி, பெரும் ஆபத்தைக் கூட விளைவிக்கும்.

தூங்கும் போது மேக்கப்பை கலைத்துவிட்டாலும், தலை அலங்காரங்களைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் கட்டாயம் தூங்கச் செல்லும்போது, தலையில் உள்ள ஹேர் -பின் ஆகியவற்றை எடுத்துவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அவை தலையில் எங்காவது குத்திவிடும்.

பெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் முன் உடை மாற்றிவிடுகிறார்கள். ஆனால் தங்களுடைய உள்ளாடைகளைப் பற்றிக் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். தூங்கச் செல்லும்போது, இறுக்கமான உடைகளை அணிந்திருத்தல் கூடாது. உள்ளாடைகளை நீக்கிவிட்டு தூங்கச் செல்வது சிறந்தது.

Related posts

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்..தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா….?

nathan

உங்களுக்கு தெரியுமா நல்ல உறக்கம் இல்லாவிட்டால் ஆபத்து

nathan

35 வயதை கடந்துவிட்டால் உடல்நலனில் அக்கறை தேவை

nathan

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதோ சில வழிகள்! !

nathan

பண நெருக்கடி சுனாமியைச் சமாளிக்கும் வழிகள்

nathan

குளிர்ச்சி தரும் கோவை இலை!

nathan

தெரிஞ்சிக்கங்க…தமனிகளில் அடைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஆச்சரியப்பட வைக்கும் சில அறிகுறிகள்!!!

nathan

செல்போன் மூலம் ஆண்களிடம் பெண்கள் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்..!

nathan