தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் – 100 கிராம்
கேரட் – 1கப் (வெட்டப்பட்டது)
வெங்காயத்தாள் – 2 தண்டுகள்(நறுக்கப்பட்டது)
பீன்ஸ் – 1/2 கப் (நறுக்கப்பட்டது)
குடைமிளகாய் – 2 (நறுக்கப்பட்டது)
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – நறுக்கப்பட்டது
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
*நூடுல்சுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
*நூடுல்சுடன் தண்ணீர் சேர்ந்து ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் சேர்க்கபடுகிறது.
*கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், மிளகுத்தூள், ஆகியவற்றை சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
*பின்னர் வேகவைத்த காய்கறி கலவையை வேகவைத்த நூடுஸ்சுடன் சேர்க்கவும்.
* ஒரு கடாயில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து 30 நிமிடங்கள் சூடு படுத்தவும்.
* அதனுடன் குடைமிளகாய், சோயா சாஸ் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் நூடுல்ஸ் மற்றும் காய்கறி கலவையுடன் சேர்த்து கிளறவும்.
* *இப்போது சுவையான சோயா வெஜ் நூடுல்ஸ் ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!