30.3 C
Chennai
Saturday, May 18, 2024
IMG 1908
சிற்றுண்டி வகைகள்

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

தேவையான பொருள்கள் –
சப்பாத்தி – 4
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சிவப்பு புட் கலர் – சிறிது
மல்லித்தழை – சிறிது
உப்பு – சிறிது
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி

செய்முறை –
சப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

சுவையான சில்லி சப்பாத்தி ரெடி. மீந்து போன சப்பாத்தியை இவ்வாறு செய்து சுவையாக சாப்பிடலாம்.
IMG 1908

Related posts

கார மோதகம்

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா

nathan

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை

nathan

தீபாவளி ஸ்பெஷல் முந்திரி – பாதாம் ரோல்

nathan

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan

கோதுமை மாவு சப்பாத்தி

nathan

சத்தான வெஜிடபிள் மோ மோ

nathan

காண்ட்வி

nathan

பாலக் பூரி

nathan