29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ddf7eda5
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

குழந்தைகளிடத்தில் சுறுசுறுப்பை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை விளையாட்டுக்கு உண்டு. ஓடியாடி விளையாடும்போது அவர்களுடைய உடல் மட்டுமின்றி மனமும் உற்சாகம் அடையும். தேவையற்ற மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றை போக்க உதவும். குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் தினமும் குறிப்பிட்ட நேரமாவது ஈடுபட வைக்க வேண்டும்.

ஆனால் இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ கேம்கள்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அதற்கு இடம் கொடுக்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் வாழ்வில் உடல் சார்ந்த விளையாட்டுகள் ஒரு அங்கமாக அமைந்திருக்க வேண்டும்.

* எலும்புகள் மற்றும் தசைகள் பலப்படும்.

* உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

* நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

* சுவாசம் மேம்படுவதற்கு வழிவகுக்கும்.

* கல்வி கற்கும் திறனை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும்.

* விளையாட்டுகள் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதோடு ஒரு இலக்கை நோக்கி முன்னேறி செல்ல தூண்டுகோலாக அமையும். குழுவாக இணைந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்யும். சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும், தீர்க்கமாக முடிவெடுப்பதற்கும் உதவும். குழந்தைகளிடத்தில் சுய மரியாதையையும் அதிகரிக்கச்செய்யும்.

* கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும்.

* விளையாடுவதை வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியம் மேம்படும்.

* இதய ஆரோக்கியம் சீராக இருக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் குறையும்.

* ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவும்.

* தசை வலிமை மேம்படும். தசைகள் நெகிழ்வுத்தன்மை அடையவும் கூடும். உடல் இயக்கமும் சீராக நடைபெறும்.

* மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

* சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும்.

* உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

* ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். ஆயுளை அதிகரிக்கும்.

உணவு பழக்கம்:

உடல் இயக்க செயல்பாடு என்பது உடற்பயிற்சியின் ஒரு அங்கமாகும். விளையாடுவது உடலுக்கு உகந்த பயிற்சியாகவும் அமையும். விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்ட பிறகு உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், ஓட்ஸ், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து கொண்ட காய்கறிகள், பச்சை இலை காய்கறிகள், கீரைகள், பிராக்கோலி, முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயத் தில் எனர்ஜி பானங்கள், சோடா, அதிக கொழுப்பு கொண்ட பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காபின் கலந்த உணவுகளை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

அன்றாட செயல்பாடுகளில் ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் தசை, எலும்புகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளையும் சேர்க்க வேண்டும். மேலும், காலை உணவை தவிர்க்காமல் உண்ண வேண்டும். தேவைப்பட்டால் வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடையே சிறிது உணவு உட்கொள்ளலாம்.

Courtesy: MalaiMalar

Related posts

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! சமையல் டிப்ஸ்!

nathan

இதுதான் கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம்…

nathan

காது சரியா கேட்கமாட்டீங்குதா?கட்டாயம் இதை படியுங்கள்

nathan

தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க இத செய்யுங்கள்!…

sangika

உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! இளம் பெண்கள் கவனத்திற்கு,. இரவில் உறங்கும் போது இதை மறவாதீர்…

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் நாக்கினால் பற்களை துழாவக் கூடாது!!

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்!

nathan

உங்களுக்கு டைம்க்கு பீரியட்ஸ் ஆகலையா? அப்படின்னா இதை செஞ்சிப் பாருங்க..

nathan