ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க மேல எப்பவும் வியர்வை நாற்றம் வீசுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

உங்கள் மீது எப்போதும் வியர்வை துர்நாற்றம் வீசுகிறதா? இதனால் பல இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளீர்களா? ஒருவருக்கு உடல் துர்நாற்றம் ஹார்மோன் மாற்றங்கள், அதிகப்படியான வியர்வை, ஆரோக்கியமற்ற டயட், மரபணுக்கள் மற்றும் மோசமான சுகாதாரம் போன்றவற்றால் ஏற்படக்கூடியது. இந்த பிரச்சனை ஒருவரது தன்னம்பிக்கையே இழக்கச் செய்யும். அந்த அளவு இது ஒரு மோசமான பிரச்சனை.

இதற்காக பலர் டியோடரண்ட்டுகள் மற்றும் பெர்ஃயூம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இதனால் தற்காலிகமாகத் தான் தீர்வு கிடைக்குமே தவிர, பிரச்சனையைத் தடுக்க முடியாது.

ஆனால் இந்த உடல் துர்நாற்ற பிரச்சனைகளுக்கு பல சமயங்களில் ஆரோக்கியமான டயட் மூலமே சரிசெய்து விட முடியும். சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு, ஒருசில உணவுகளைத் தவிர்த்து வந்தால், நிச்சயம் உடல் துர்நாற்ற பிரச்சனையைத் தடுக்கலாம்.

நம் உடலை சுத்தம் செய்யும் மற்றும் உடல் துர்நாற்றத்தைப் போக்க உதவும் பல உணவுகள் உள்ளன. அவற்றை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது அவற்றை துர்நாற்றம் அதிகம் வீசும் பகுதிகளில் பயன்படுத்தி வந்தாலோ, உடல் துர்நாற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உங்களுக்கு அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதோடு, நல்ல நறுமணத்தையும் கொண்டது. இந்த பழத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், உடல் துர்நாற்றத்தை நீக்க உதவுவதோடு, பாக்டீரியாவால் ஏற்படும் வாய் துர்நாற்றமும் கட்டுப்படும். குறிப்பாக இதில் உள்ள அசிட்டிக் பண்புகள், சருமத்தில் உள்ள pH அளவை குறைத்து, துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கும். மேலும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, உடலில உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை நீக்கவும் உதவும்.

எப்படி பயன்படுத்துவது?

* தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தயாரித்து எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள்.

* அக்குள் அல்லது பாதங்களில் துர்நாற்றம் அதிகம் வீசினால், பாதி எலுமிச்சையை அப்பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளியுங்கள். இப்படி தினமும் ஒருமுறை செய்தால், துர்நாற்றம் வீசுவது முற்றிலும் நீங்கும்.

தக்காளி

உடல் துர்நாற்றத்தைத் தடுக்கும் மற்றொரு சிறப்பான உணவுப் பொருள் தக்காளி. தக்காளியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் இது சருமத்துளைகளை சுருங்கச் செய்து, வியர்வை அதிகம் சுரப்பதைக் கட்டுப்படுத்தும். தக்காளி ஜூஸை ஒருவர் குடித்தால், உடல் சூடு குறைந்து, அதிகம் வியர்ப்பதும் குறையும்.

எப்படி பயன்படுத்துவது?

* தினமும் 1/2 டம்ளர் தக்காளி ஜூஸைக் குடியுங்கள் அல்லது சாலட்டில் ஒரு தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* குளிப்பதற்கு முன் ஒரு தக்காளி துண்டை அதிகம் வியர்க்கும் பகுதிகளில் தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளியுங்கள். இப்படி தினமும் செய்தாலும், வியர்வை நாற்றத்தைத் தடுக்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம் மற்றும் பாதங்களில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும். மேலும் க்ரீன் டீ உடலில் க்ளுட்டாதியோனைன் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து, தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும். உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால், அது உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதில் உள்ள பாலிஃபீனால்கள், வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி, அதில் 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ இலைகளைப் போட்டு நன்கு 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

* பின் அதை வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து கலந்து, தினமும் 2-3 கப் குடித்து வாருங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த நேச்சுரல் டியோடரண்ட். இது உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும். இதற்கு இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பணபுகள் உடல் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். மேலும் ஒருவர் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், அது செரிமான ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி, 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்குங்கள்.

* இந்த செயலை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். முக்கியமாக கொப்பளித்த எண்ணெயை விழுங்கிவிடாதீர்கள்.

* வேண்டுமானால் இந்த எண்ணெயை அதிகம் வியர்க்கும் பகுதிகளில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

ரோஸ்மேரி

நல்ல நறுமணத்தைக் கொண்ட ரோஸ்மேரி, உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபட உதவும். இதில் உள்ள மருத்துவ பண்புகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் உள்ள மென்தால் மற்றும் குளோரோபில், உடல் துர்நாற்றத்தைத் தடுத்து, உடலில் இருந்து நல்ல மணத்தை வீசச் செய்யும்.

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த ரோஸ்மேரி இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் குடியுங்கள்.

* இல்லாவிட்டால், 8-10 துளிகள் ரோஸ்மேரி ஆயிலை 2 டேபிள் ஸ்பூன் நீரில் ஊற்றி, அதிகம் வியர்க்கும் பகுதிகளில் தடவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்த உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

சேஜ்

சேஜ் மூலிகையில் உள்ள நறுமணமிக்க பண்புகளான டியோஸ்மெடின், அபிஜெனின் மற்றும் லுடியோலின், உடலில் நல்ல நறுமணத்தை வீசச் செய்யும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைத் தடுத்து, வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும். முக்கியமாக இந்த மூலிகை வியர்வை சுரப்பிகளில் இருந்து குறைவான அளவில் வியர்வையை உற்பத்தி செய்யும். மேலும் இது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு கப் சுடுநீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த சேஜ் இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, தினமும் 1-2 முறை குடியுங்கள்.

* இல்லாவிட்டால், சேஜ் டீ நன்கு குளிர்ந்த பின், அதிகம் வியர்க்கும் பகுதிகளில் தடவி, பின்பு கழுவுங்கள்.

முக்கியமாக இந்த டீயை கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குடிக்கக்கூடாது. அதேப் போல் அதிகளவில் இந்த சேஜ் டீயைக் குடித்தால், தலைச்சுற்றல் வரக்கூடும்.

பட்டை

வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்கும் அற்புத பொருள் தான் பட்டை. இதில் உள்ள மருத்துவ பண்புகள், உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இந்த பட்டை உடல் துர்நாற்றத்தைத் தடுப்பதோடு, வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு கப் நீரில் 1 துண்டு பட்டையைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள். இப்படி தினமும் ஒரு முறை குடித்தால், செரிமான ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

* வாய் துர்நாற்றம் அதிகம் இருப்பவர்கள், தினமும் பட்டை போட்டு கொதிக்க வைத்த நீரால் வாயைக் கொப்பளியுங்கள். இதனால் உடனடி பலன் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button