24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
tamil 3
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’

எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்புக்கு வைட்டமின் டி அவசியமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியது. எடை இழப்பிற்கும் வழிவகுக்கக்கூடியது. அதேவேளையில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் எலும்புகள் பலவீனமாகி விடும். எலும்பு சிதைவுகள், மனநல பிரச்சினைகள் மற்றும் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

அதனால் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது. உடல் பருமன், நீரிழிவு போன்றவை வைட்டமின் டி குறைபாடு இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு முடிவின்படி, வாய்வழி ஆரோக்கியத்தின் மூலமும் வைட்டமின் டி குறைபாட்டை அறிந்து கொள்ளலாம்.

அடிக்கடியோ அல்லது தொடர்ச்சியாகவோ வாய், உதடுகள் மற்றும் நாக்கில் வலியோ அசவுகரியமோ உண்டானால் அதுவும் வைட்டமின் டி பற்றாக்குறைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக அமையலாம். கன்னத்தின் உள் அடுக்கு பகுதிகளிலும் பாதிப்பை உணர முடியும். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு கடுமையாக இருக்கும்.

நாக்கில் எரிச்சல் உணர்வு, வாயின் உள் அடுக்கு பகுதியில் வலி, தொண்டை வலி, தொண்டை வறட்சி, வாயில் உணர்வின்மை, நாக்கு கூசுதல், சாப்பிடும்போது உணவின் சுவை மாறுபடுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.

எவ்வாறு சரி செய்யலாம்?

சூரிய ஒளியில் தினமும் குறிப்பிட்ட நேரம் செலவிடுவது, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் டி மாத்திரைகள், மருந்துகள் சாப்பிடுவது மட்டும் போதாது. வைட்டமின்கள் உடலில் சரியாக உறிஞ்சப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மீன், தயிர், குறைந்த கொழுப்புள்ள பால், காளான், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளான பச்சை இலை காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை சேர்ப்பதன் மூலம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கலாம்.

வளர்சிதை மாற்றம் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்கும் செயல்முறையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

வைட்டமின் கே, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற மற்ற ஊட்டச்சத்துக்கள் மீதும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இந்த ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் டி உறிஞ்சுதலை துரிதப்படுத்தும்.

கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலோ, ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை தவிர்த்தாலோ உடலில் வைட்டமின் டி ஆழமாக உறிஞ்சப்படாது. வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடியது. அது உடலில் உறிஞ்சப்படுவதற்கு ஆரோக்கியமான கொழுப்பு தேவைப்படுகிறது. நெய் அல்லது எண்ணெய்யை அளவாக எடுத்துக்கொள்வது ஒருபோதும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

பால் பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தானிய வகைகளையும் உணவில் தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும்.

மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் அவசியமானது. ஏனெனில் மன அழுத்த ஹார்மோன்கள் வெளிப்படும்போது,​ அது குடலை பாதிக்கும். ஏனெனில் குடலில்தான் வைட்டமின் டி உறிஞ்சப்படுகிறது. அதனால் அதன் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியமானது.

Courtesy: MalaiMalar

Related posts

நகசுத்தி வீட்டு வைத்தியம்

nathan

மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் மார்பகங்கள் வலிப்பதேன்?

nathan

பூண்டு சிக்கன் கிரேவி! டயட்டில் இருப்போருக்கான…

nathan

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்து போராட இயற்கை சிகிச்சைகள்!!!

nathan

அபார்ஷனுக்கு பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்

nathan

எந்த இரத்த வகைக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு அதிக ஆபத்து உள்ளது தெரியுமா?

nathan

மூளை, நுரையீரல், இதயம், சருமம்… நலம் காக்கும் எலுமிச்சைத் தண்ணீர்!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! அடிக்கடி தலைவலியா? காரணம் மூளைக்கட்டியாக கூட இருக்கலாம்னு தெரியுமா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

nathan