மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…எத்தனை முறை பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் வீசுகிறதா?

வாய் துர்நாற்றம் என்பது பொதுவாக பல் துலக்கினாலும் சிலரிடம் வரும். ஆனால் சிலர் அவை எதனால் வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளாததே இதற்கு மிகப்பெரிய காரணம்.

அப்படி இருக்கும் நபர்களிடம் சிலர் மட்டுமே உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்று கூறுவர். ஆனால் அவர்கள் அதை அலட்சியமாக எடுத்துக்கொள்வார்கள். ஒரு சிலர் அதுவே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருப்பார்கள்.

வாய் துர்நாற்றத்திற்கான கரணங்கள்:

வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்களை சொல்லாம், கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் வாயில் பெருகிக்கொண்டே இருப்பதும்.

உணவு சாப்பிட்டபின் வாயை சுத்தமாக கழுவாமல் இருப்பது, பற்களில் ஏற்படும் சிதைவு, பற்குழிகள் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள் என பல காரணங்கள் முன்வைக்கலாம்.

புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்கள் மெல்லுதல் பான் பராக் பழக்கங்கள் ஆகியவற்றால் பற்களில் கறை ஏற்பட்டு இவை நாளடைவில் வாய் துர்நாற்றைத்தை உண்டாக்கும். ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து இயல்பை விட குறைவாக இருந்தாலும் வாயிலிருந்து துர்நாற்றம் வீசக்கூடும்.

வேறு சிலருக்கு தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியியல் ஏதேனும் கோளாறுகள்ஏற்பட்டால் கூட வாய் துர்நாற்றம் வீசும்.

இவை மட்டும் இல்லாமல் வேறு சிலருக்கு வாயிலும் குடியிருக்கும் நுண்கிருமிகள் பிராண வாயு அல்லாத சமயங்களிலும் பெருகுவதாலும், அவை வெளியேற்றும் கழிவுகளாலும் கூட வாயில் துர்நாற்றம் வீசும்.

துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் முறைகள்:

வாய் துர்நாற்றத்தை போக்க வாயை சுத்தமாக வைத்திருப்பதே இதற்கான முறையான சிகிச்சை. இது கேட்பதற்கு எளிதாக இருக்கும் ஆனால் நடைமுறைப்படுவதில் தான் அதிக கவனம் தேவை.

வாயை எப்போதும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க வேண்டும். வாயை சுத்தமான தண்ணீரால் கழுவி கொப்பளிக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு அசைவ உணவை தொடர்ந்து சாப்பிடுவதாலும், வேறு சில காரணங்களாலும் இவர்களின் வாயில் இருந்து தொடர்ந்து நுண்கிருமிகள் உற்பத்தி இருந்து கொண்டேயிருக்கும்.

இவைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மவுத் வாஷ்எனப்படும் வாய் கொப்பளிக்கும் மருந்தை பயன்படுத்தலாம்.

இரவு நேரங்களிலும் சாப்பிட்ட பின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இரவு நேரத்தில் கேரட்டை சாப்பிடலாம் கேரட் ஆனது துர்நாற்றத்தைபோக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button