மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? சிசேரியன் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

பிரசவ நேரத்தில் பிரச்சனை எழுகிறதோ இல்லையோ, மருத்துவர்கள் கூறும் ஒரு வார்த்தைக்கு பயந்து, வேணாம்ங்க சிசேரியன் பண்ணிடலாம் என கவுண்டரில் பணத்தை கட்டி, வயிற்றில் கத்தியை வைத்து குழந்தையை வெளியே எடுத்துவிடுகின்றனர்.

சிசேரியன் உயிருக்கு ஆபத்து இல்லை என கருதி, சுகப்பிரசவம் என்ற வார்த்தையே அரிதாக கேட்கும்வண்ணம் செய்துவிட்டனர். ஆனால், நேர்மையான மருத்துவர்களோ, சிசேரியன் வலி குறைவாக இருப்பினும், பிரசவத்திற்கு பிறகு அதிக செலவும், உடல்நலத்தில் பல கோளாறுகள் உண்டாக்குவதும் சிசேரியன் தான் என கூறுகின்றனர்.

உண்மை #1

நாற்பது வருடங்களுக்கு முன்னர் 20 குழந்தைகளில் ஒரு குழந்தை சிசேரியன் முறையில் பிரசவம் செய்யப்பட்டது. இன்று மூன்றில் ஒரு குழந்தை சிசேரியன் மூலமாக பிரசவம் செய்யப்படுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உண்மை #2

உலகிலேயே பிரேசில் மற்றும் சீனாவில் தான் அதிகளவில் சிசேரியன் முறையில் குழந்தைகள் பிரசவிக்கப்பகின்றன. பிரேசில் – 80% ; சீனா – 50%.

உண்மை #3

சுகப்பிரசவத்தை விட, சிரியன் எளிமையாக இருக்கும், வலி குறைவாக இருக்கும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால், சிசேரியன் செய்யும் போது தான் தொற்று, இரத்தம் கட்டுதல், கட்டிகள் உருவாதல், இரத்தப்போக்கு அதிகமாதல், என நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உண்மை #4

ஆரம்பக் காலக்கட்டதில் மிகவும் முடியாத நிலைமை, குழந்தை அல்லது தாய்க்கு பிரச்சனை என்றால் மட்டும் தான் சிசேரியன் செய்தனர். இதற்காக தான் இந்த முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இப்போது சிசேரியன் செய்வது சர்வசாதாரணமாக இருக்கிறது. இதை தான் அனைவரும் விரும்புகின்றனர்.

உண்மை #5

சுகப்பிரசவம், சிசேரியன் செலவு ஒப்பிடுகையில், மருத்துவ செலவில் இருந்து, மருத்துவமனை செலவு, ஆரோக்கியம் சார்ந்த செலவுகள் என சிசேரியன் தான் அதிக செலவு வைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button