29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
men office 1
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்!

பெண்கள் மட்டும் தான் எப்போதும் பிரஷ்ஷாக காட்சியளிக்க வேண்டும் என்பதில்லை. ஆண்களும் அப்படி காட்சியளிக்கலாம். ஆனால் அதற்கு ஆண்கள் தங்கள் அழகின் மீது கவனத்தையும், அக்கறையையும் காட்ட வேண்டும். பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும், தங்கள் ஹேண்ட்-பேக்கில் ஒரு மினி மேக்கப்-கிட் வைத்துக் கொண்டு சுற்றுவார்கள். இது தான் பெண்களை எப்போதும் பிரஷ்ஷாக காட்டுகிறது.

ஆனால் ஆண்களால் அப்படி எந்நேரமும் தங்கள் கையில் ஒரு பையை வைத்துக் கொண்டு சுற்ற முடியாவிட்டாலும், வீட்டை விட அதிகமாக நேரம் செலவழிக்கும் அலுவலகத்தில் தங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள டெஸ்க் டிராயரில் ஒருசில அடிப்படை அழகு சாதனப் பொருட்களை வைத்துக் கொள்வது நல்லது.

 

என்ன தான் அலுவலகத்தில் நாள் முழுவதும் ஏசியில் இருந்தாலும், நாளின் முடிவில் எண்ணெய் வழிந்த முகத்துடன் பொலிவிழந்து தான் நாம் காணப்படுகிறோம். இதனால் எந்த ஒரு முக்கிய இடங்கள் அல்லது விஷேசங்களுக்கு அலுவலகத்தில் இருந்து செல்ல முடியாமல், வீட்டிற்கு சென்று பிரஷ்-அப் செய்து கொண்டு, பின் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 

இப்படியொரு நிலையைத் தவிர்க்க நினைத்தால், ஆண்கள் தங்கள் அலுவலகத்தில் ஒருசில அழகு சாதனப் பொருட்களை வைத்துக் கொள்வதே நல்லது. இப்போது ஆண்களை பிரஷ்ஷாக காட்ட உதவும் அந்த அடிப்படை அழகு சாதனப் பொருட்கள் எவையென்று காண்போம்.

ஃபேஷ் வாஷ்

அலுவலகத்திற்கு செல்லும் ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒரு அழகு பராமரிப்பு பொருள் தான் ஃபேஷ் வாஷ். அதுவும் சருமத்திற்கு பொருத்தமான கெமிக்கல் அதிகம் இல்லாத மைல்டு கிளின்சரைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சிறந்தது. அதிலும் இயற்கை உட்பொருட்கள் அடங்கிய ஃபேஷ் வாஷ் என்றால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

பிபி க்ரீம்

பொதுவாக பிபி க்ரீம் முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிள் அல்லது பருக்களை மறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த பொருள் அதற்கு மட்டுமின்றி, சமச்சீரற்ற சரும நிறம், வறண்டு அசிங்கமாக காணப்படும் சருமம் போன்றவற்றை மறைக்கவும் பெரிதும் உதவும். மேலும் தற்போது ஆண்களின் சருமத்திற்கு என்று பிரத்யேகமாக பிபி க்ரீம் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்துவது இன்னும் நல்லது.

மாய்ஸ்சுரைசர்

தற்போது அடிக்கும் வெயிலுக்கு சருமத்திற்கு போதுமான நீர்ச்சத்து கிடைப்பதில்லை. என்ன தான் எண்ணெய் பசை சருமத்தினராக இருந்தாலும், சில சமயங்களில் சருமம் வறட்சியடைந்து காட்சியளிக்கிறது. எனவே உங்கள் சரும வகைக்கு ஏற்ப பிசுபிசுப்புடன் இல்லாத மாய்ஸ்சுரைசரைப் பார்த்து தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

லிப் பாம்

பெண்கள் மட்டும் தான் லிப் பாம் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. ஆண்களுக்கும் உதடுகளில் வறட்சி ஏற்படும். இப்படி வறட்சி ஏற்பட்டு அசிங்கமாக காட்சியளிக்கும் உதடுகளை அழகாக பராமரிக்க நினைத்தால், அடிக்கடி லிப் பாம் பயன்படுத்துவதே சிறந்த வழி.

பெர்ஃப்யூம்

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பயங்கரமாக வியர்த்துக் கொட்ட ஆரம்பிக்கும். அதிகமாக வியர்வை வெளியேறுவதால், துர்நாற்றம் வீசும். ஒருவர் துர்நாற்றமிக்க உடலுடன் இருந்தால், எப்படி உடன் வேலைப்புரிபவர்கள் அருகில் வந்து பேசுவார்கள்? எனவே இம்மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க நினைத்தால், எப்போதும் அலுவலக டிராயரில் ஒரு பெர்ஃப்யூமை வைத்து பயன்படுத்துங்கள்.

Related posts

நீண்ட நாள் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு

nathan

உடற்பயிற்சிக்கு முன் உப்பு உட்கொள்வதால் ஏதேனும் நன்மை உண்டா?

nathan

உடல் எடையை அதிகரிக்க வழிகள்

nathan

இரவில் தூங்காவிட்டால் ஏற்டும் பிரச்சனைகள்

nathan

தினமும் கக்கா போக கஷ்டப்படுறீங்களா? ஒரு ஸ்பூன் சேர்த்து குடிங்க…

nathan

தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்குவது சரியா? தவறா?

nathan

ஒரு தேங்காய் போதும்… பூமிக்கடியில் தண்ணீர் எங்க அதிகம் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…உணவுக் கட்டுப்பாட்டை சீரழிக்கும் பத்து பழக்கவழக்கங்கள்!!!

nathan

இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan