பொதுவாகவே நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பாலில் அதிகம் நிறைந்துள்ளன.
எலும்புகள் வலுப்பட, வளர்சிதை மாற்றத்துக்கு பால் மிகவும் தேவையான ஒன்று.
இதில் பூண்டை சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பூண்டு பால் தயாரிப்பது எப்படி?
சாதாரண பூண்டை விட, பாலில் கொதிக்க வைத்து, வேக வைத்து சாப்பிடும் பூண்டினால் பல நன்மைகள் கிடைக்கும்.
நன்கு கொதிக்க வைத்த பாலில் பூண்டு பற்களை தேவையான அளவிற்கு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பூண்டு வெந்ததும் அதனோடு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியில் பூண்டை நன்றாக மசித்துவிட்டு, தேவையான அளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொண்டால் சுவையான பூண்டு பால் தயார்!!!
பயன்கள்
- சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
- முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம்.
- பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
- பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
- ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
கவனம் தேவை
கோடைகாலத்தில உங்களுக்கு நெஞ்செரிச்சல் / இரைப்பை / பெப்டிக் புண்கள் இருந்தால் பூண்டு பால் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.