22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
ht1305
ஆரோக்கியம் குறிப்புகள்

கால்சியம் குறைவா இருக்கா ஜூஜுபி சாப்பிடுங்க

ஜூஜுபி உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். இலந்தையில் மாவுப் பொருள் , புரதம், தாது உப்புகள், மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள்
பழுத்து உடையும்.

பித்த மயக்கத்தை போக்கும் உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். .

பற்களுக்கும் உறுதி தரும்

உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதி தரும் உடம்பில் பலம் பெருகும். பகல் உணவுக்குப் பிறகு இலந்தைப்பழத்தை உட்கொண்டால்

செரிமானம் உண்டாவதுடன் பித்தமும் கபமும் சாந்தமுறும். பழத்தை உலர்த்தி கொட்டையை நீக்கி உட்கொண்டால் கபத்தை வெளிக் கொண்டு வரும்.

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

பற்களும் உறுதிபெறும். கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும் செரிமானத்தை தூண்டும்.

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். அவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.
ht1305

Related posts

உங்களுக்கு சூடு பிடிச்சுருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!

nathan

முதுமையில் இளமை சாத்தியமா?தெரிந்துகொள்வோமா?

nathan

ஆயுளை காக்கும் பற்கள்

nathan

கற்றாழையை இப்படி சாப்பிட்டால் உயிருக்கு பேராபத்து?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஏன் தெரியுமா பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன் ??

nathan

வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்….

sangika

கொரோனா சிகிச்சைக்கா மாத்திரை! வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்!

nathan

தலை முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பிளாக் டி!….

nathan