காப்ஃபைன் என்பது காபியில் இருக்கும் மூலப்பொருள். இது அதிகப்படியாக நமது உடலில் கலந்தால் இதய பாதிப்புகள் ஏற்படும் என உலக அளவில் மருத்துவ குழுமத்தினர் ஓர் அறிக்கையில் கூறியிருக்கின்றனர். இதனால், காபி குடிப்பதனால் இதய பாதிப்பு ஏற்படாமல் இருக்க காப்ஃபைன் நீக்கப்பட்ட காபி தூள்கள் உலக சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. காபி பிரியர்களும் அதை விரும்பு வாங்கி உபயோகித்து தினமும் அவர்கள் விரும்பும் காபியை ருசித்துப் பருகி வருகின்றனர். சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் காப்ஃபைன் நீக்கப்பட்டுள்ள காபி தூளின் மூலமாக நிறைய பக்க விளைவுகள் ஏற்படுவதாய் கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரண காபிக்கும் காப்ஃபைன் நீக்கப்பட்ட காபிக்கும் இருக்கிற வேறுபாடு என்னவெனில், சாதாரண காபியில் 60 – 150 மில்லி கிராம் காப்ஃபைன் கலப்பு இருக்கிறது எனில், காப்ஃபைன் நீக்கப்பட்ட காபியில் 2 – 5 மில்லி கிராம் காப்ஃபைன் கலப்பு இருக்கும். காஃப்பைனை நீக்க சில வழிகளை பின் பற்றுகின்றனர், கரிம இரசாயனங்கள் அல்லது தண்ணீர் அல்லது கார்பன் டை ஆக்சைடு போன்றவையை உபயோகிக்கின்றனர். இந்த காப்ஃபைன் நீக்கப்பட்ட காபியினால் வாதம், கெட்ட கொழுப்பு, எலுபின் அடர்த்தி போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இதன் மூலம் ஏற்படும் உடல்நல பக்க விளைவுகளை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
இருதய சிக்கல்கள்
காப்ஃபைன் நீக்கப்பட்ட காபியை உபயோகப்படுத்துவதனால் உங்கள் உயிருக்கே அபாயம் ஏற்படலாம். இது மாரடைப்பிற்கான காரணிகளை அதிகப்படுத்துகிறது. எல்.டி.எல். (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பை இது அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் அதிகரித்தால் இதயம் பலவீனம் அடையும். இதன் மூலமாக மாரடைப்பு, இதய நோய்கள், இதய செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
எலும்பின் அடர்த்தி
காப்ஃபைன் நீக்கப்பட்ட காபி உங்களது எலும்பின் அடர்தியல் பாதிக்கிறது. இது உங்களது உடலில் உள்ள கால்சியம் சத்தை இழக்க செய்கிறது. இதுமட்டும் இன்றி இது எலும்பு சார்ந்த நோய்களையும் ஏற்படுத்துகிறது.
தீயக் கொழுப்புச்சத்து
காப்ஃபைன் நீக்கப்பட்ட காபி எல்.டி.எல் எனப்படும் தீயக் கொழுப்புச்சத்தின் அளவை உங்களது உடலில் அதிகரிக்க செய்கிறது. மற்றும் இது அபோலிப்போப்புரதம் பி (Apolipoprotein b) எனும் சத்தை அதிகரிக்கிறது இதனால் அபாயமான இதய பாதிப்புகள் ஏற்படும்.
முடக்கு வாதம்
இவை மற்றும் இல்லாது காப்ஃபைன் நீக்கப்பட்ட காபி உட்கொள்வதனால் முடக்கு வாதம் ஏற்படும் அச்சமும் இருக்கிறது.ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை நீங்கள் காப்ஃபைன் நீக்கப்பட்ட காபியை குடித்து வந்தால் முடக்கு வாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாய் கூறப்படுகிறது.
அல்சர்
காபியில் இயற்கையிலேயே அதிகப்படியான அமிலத்தன்மை இருக்கிறது. காப்ஃபைன் நீக்கப்பட்ட காபியில் இது மிகவும் அதிகமாய் இருக்கிறது. இதனால் அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனால் காப்ஃபைன் நீக்கப்பட்ட காபியை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது.
இரைப்பை சுரப்பு
கடைசியாக கூறப்படுவது, காப்ஃபைன் நீக்கப்பட்ட காபியை உட்கொள்வதனால் இரைப்பை சுரப்பு அதிகரிக்கிறது. இரைப்பை சுரப்பு அதிகமாவதால் வயிற்றில் அமிலம் அதிகமாய் தங்குகிறது.