மருத்துவ குறிப்பு

உங்க பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

குழந்தைகள் வளர்ந்த பின் வாழ்க்கையை கற்பிக்க துவங்குவதைவிட, வளர, வளர அந்தந்த வயதில் அவர்களுக்கு தேவையானவற்றை கற்பிப்பது தான் உன்னதம் மற்றும் சிறந்தது. இதை பெற்றோர்கள் சரியாக செய்ய வேண்டும். இல்லையல் குழந்தைகள் மந்தமாக தான் இருப்பார்கள்.

 

படிப்பது மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல. சமூகத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், மரியாதை அளிப்பது, தனியாக உலகில் எப்படி வாழ்வது, பெற்றோர் இல்லாத போது வீட்டை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது எப்படி, பணத்தின் அருமை என நீங்கள் பள்ளிப்படிப்பை தாண்டி சமூகம், வாழ்க்கை சார்ந்த படிப்பை கற்பிக்க வேண்டும்.

 

அந்த வகையில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு 15 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய 7 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்….

செயல் #1

வங்கியில் எப்படி பணம் சேமிப்பது. அதனால், என்ன பயன். ஆர்.டி., எப்.டி என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? பணம் சேமிப்பதன் அவசியம் என பொருளாதாரம் மற்றும் சேமிப்பு குறித்து கற்றுக் கொடுங்கள்.

செயல் #2

தங்களை தாங்களே எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். மன ரீதியாக, உடல் ரீதியாக, ஆரோக்கியம் ரீதியாக அவர்கள் தங்களை காத்துக் கொள்ள நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

செயல் #3

உடலுறவு என்றால் என்ன? எதிர் பாலின ஈர்ப்பு, அதன் மீதான பார்வை, தவறான உடலறவு எந்தெந்த தாக்கத்தை உண்டாக்கும் என்பதை குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும்.

செயல் #4

முடிந்த வரை இருபதுகளை தாண்டும் வரை குழந்தைகள் அதிகம் ஹோட்டல் உணவுகள் சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இல்லாத போது வீட்டிலேயே சமைத்து உண்ண குறைந்தபட்ச சமையல் நுணுக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

செயல் #5

குறைந்தபட்சம் சின்ன, சின்ன காயங்களுக்காவது எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என கற்றுக் கொடுங்கள். இது, அவர்களுக்கு இல்லையெனிலும் மற்றவர்களுக்கு உதவ பயன்படும்.

செயல் #6

பொருளாதார மேலாண்மை! பணத்தை ஒவ்வொரு செலவுக்கு எப்படி பிரித்து செலவழிக்க வேண்டும். எப்படி குடும்பத்தை நீங்கள் நடத்துகிறீர்கள், பணத்தின் அருமை மற்றும் பயன்பாடு குறித்து கற்பிக்க தவற வேண்டாம்.

செயல் #7

வீட்டு வேலைகள், வீடு துடைப்பதில் இருந்து, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, துணிகளை துவைப்பது, பாத்திரங்கள் கழுவுதல் என நீங்கள் இல்லாத போது வீட்டை அவர்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையானவற்றை கற்றுக் கொடுங்கள்.

Related Articles

One Comment

  1. உங்கள் பிள்ளைகள் சொன்னாலே இதில் வரும் உங்கள் யார் பெற்றோர்தானே ? உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் என்றால் வேறு பெற்றோரா ? இல்லையே …அப்புறம் ஏன் உங்க பிள்ளைகளுக்கு பெற்றோர் வருகிறது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button