27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
useffectsofcooldrinks
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? வாழ்நாளை குறி வைக்கும் குளிர் பானங்கள்!

கூல் ட்ரிங்க்ஸ் அல்லது சாஃப்ட் ட்ரிங்க்ஸ் என கூறப்படும் சோடா கலப்பு அதிகமாக இருக்கும் பானங்களை விரும்பி பருகாதவர் யாருமில்லை. பார்ட்டி, வீட்டு விஷேசங்கள், நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது, திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் என எங்கிலும் இந்த பானங்களை கையில் எந்தியப்படி குடித்துக்கொண்டே சுற்றுவது நாம் அனைவரும் ஸ்டைலாக கருதும் ஃபேஷனான விஷயங்களில் ஒன்று. ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது விருந்துகளிலோ அதிகமாக சாப்பிட்டுவிட்டால் உடனே நம் அனைவரின் மனதிலும் “டிங்”கென்று ஒரு மணியடிக்கும், “கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சா எல்லாம் சரியாயிடும்” உடனே நமது வீட்டில் இருக்கும் சிறுவர்களை கடைக்கு அனுப்பி வாங்கி வந்து குடித்துவிடுவோம்.

 

இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று தெரியாது நாம் இதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். கூல் ட்ரிங்க்ஸில் கலக்கப்படும் நச்சுக்களின் தன்மையும், அது நாம் வீடு துடைக்க உபயோகப்படுத்தும் இரசாயனதிற்கு ஈடாக இருப்பதையும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நாம் கண்முன்னே நிகழ்ந்த உண்மை. ஆயினும் நாம் அதை மறந்து செயல்பட்டு வருகிறோம். கோடைக்காலம் தொடங்க போகிறது கண்டிப்பாக நாம், இளநீர், சர்பத், பதனி போன்ற இயற்கை பானங்களை பருகாமல் கூல் ட்ரிங்க்ஸ் தான் குடிப்போம் என்று அடம்பிடிக்க போவது தெரிந்த விஷயம் தான் அதற்கு முன்பு இதை படித்து விட்டு, உங்கள் வாழ்நாளை நீங்களே முடிவு செய்துக்கொண்டு அதன் பிறகு கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில்களில் கை வையுங்கள்…

கொழுப்பு

துரித உணவுகள். தின்பண்டங்கள், எண்ணெய் உணவுகள் எல்லாம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு கூடும் என நம் அனைவருக்கும் தெரியும். சோடா கலந்த கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் எக்கச்சக்கமாக, உடல் முழுதும் கொழுப்பு கூடுகிறது. இதை நீங்கள் உங்கள் நண்பர்கள் மத்தியிலேயே கூட கண்டிருக்கலாம். ஒரு சிலர் தினசரி கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், அவர்களின் உடல் எடை எண்ணெய் உணவுகள் சாப்பிடுபவர்களை விட அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் சோடாவில் இருக்கும் நச்சுக்கள் தான் என்கின்றனர்.

கார்மல் புற்றுநோய் (Caramel Cancer)

கூல் ட்ரிங்க்ஸில் வண்ணம் சேர்ப்பதற்காக மெத்திலிமிடாஜோல் (Methylimidazole) என்னும் இரசாயனம் கலக்கப்படுகிறது, இது விலங்குகளுக்கு ஏற்படும் புற்றுநோயில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறன இரசாயன கலப்புகளினால் தயாரிக்கப்படும் கூல் ட்ரிங்க்ஸ் தான் நம் அனைவரின் விருப்பமான பானமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது.

சருமத்தன்மை மாற்றம்

கூல் ட்ரிங்க்ஸ்களில் அதன் வாழ்நாளை நீட்டிக்க பாஸ்ஃபேட் மற்றும் பாஸ்ஃபோரிக் அமிலங்கள் சேர்க்கப்படுகின்றன, இவை கூல் ட்ரிங்க்ஸ் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க உதவுகிறது. ஆனால், இந்த கலவைகள் நமது சருமத் தன்மையை பாதிக்கிறது. தசைகளின் வலுவை குறைக்கிறது. இதனால், சீக்கிரமாகவே சருமம் முதிர்ச்சியான தோற்றமடைந்துவிடும்.

ஈறு பிரச்சனை

கூல் ட்ரிங்க்ஸில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை மற்றும் அமிலங்களின் தன்மையினால் நமக்கு ஈறு மற்றும் பற்பசை பிரச்சனைகள் வருகின்றன. இதனால் நமது பற்கள் தனது வலுவை இழக்கிறது.

காஃப்பின்

நிறைய சோடா கலப்புடைய கூல் ட்ரிங்க்ஸ்களில் காஃப்பினின் கலப்புகள் இருக்கிறது, இதன் காரணமாக புற்றுநோய், மார்பக கட்டிகள், இரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.

பிரக்டோஸ்

கூல் ட்ரிங்க்ஸ்களில் இனிப்பு சுவைக்காக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பிரக்டோஸ்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால், நீண்ட நாள் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலின் நீரளவு பாதிக்கப்படும்

சோடாவில் கலக்கப்படும் சோடியம், செயற்கை முறை சர்க்கரை, காப்ஃபைன் போன்றவைகள் உடலின் நீரளவை கெடுக்கிறது. இதன் காரணமாக நமக்கு பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

ஆண்மை

நாம் குடிக்கும் அனைத்து வகை குளிர் பானங்களிலும் பைசெப்ஃனால்-ஏ எனப்படும் ரசாயன பூச்சு தடவி செய்யப்படுகிறது, இது ஆண்களின் ஆண்மையை பாதிக்கும் தன்மையுடையதாகும்.

Related posts

உங்கள் கவனத்துக்கு காலை உணவை புறக்கணிப்பதால் உண்டாகும் ஆபத்து என்ன தெரியுமா?

nathan

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில் தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… சிறுநீரகங்களில் உள்ள அழுக்கை வெளியேற்ற அடிக்கடி குடிக்க வேண்டிய ஜூஸ்கள்!

nathan

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

nathan

சுண்டல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

அத்தி பழம் உண்பதால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

nathan

உடல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உங்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் சட்டென்று குறையணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan