இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் உடல் பருமன். குறிப்பாக இந்த பிரச்சனையால் ஆண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது தான். உடலில் உழைப்பு ஏதும் இல்லாமல், உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உட்கொள்ளும் உணவுகள் அப்படியே தங்கி கொழுப்புக்களாக மாறி, உடல் பருமனை அதிகரித்துவிடுகிறது.
அதுமட்டுமின்றி, தற்போதுள்ள வேலைப்பளுமிக்க அலுவலகத்தினால், உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. இதனால் அன்றாடம் சிறு உடற்பயிற்சிகளை கூட செய்ய முடியாமல், உண்ட உணவுகள் கரைவதற்கு தேவையான ஆற்றல் இல்லாமல் கொழுப்புக்களாக உடலில் ஆங்காங்கு தங்கிவிடுகின்றன. இப்படி தங்கும் கொழுப்புக்களால், உடல் எடை அளவுக்கு அதிகமாவதோடு, நோய்களும் சீக்கிரம் வந்து, விரைவில் மரணத்திற்கு வழிவகுக்கிறது.
குறிப்பாக ஆண்கள் தான் உடல் பருமனால், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, ஆண்கள் தங்களின் உடல் பருமனை குறைக்க செய்ய வேண்டியவைகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த செயல்முறைகள் அனைத்தும் மிகவும் ஈஸியாக இருப்பதுடன், இதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை.
செய்யலாம்!
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரவு உணவு நேரம்
இரவில் எந்த காரணம் கொண்டும் 9 மணிக்கு மேல் உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் உணவை உட்கொண்டு, 3 மணிநேரத்திற்கு பின் தான் தூங்க செல்ல வேண்டும். இதனால் உணவுகள் சீராக செரிமானமடைந்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.
படிகட்டுக்கள்
அலுவலகத்தில், லிப்ட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து, மாடிப் படிக்கட்டுக்களைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். மேலும் படிக்கட்டுக்கள் ஏறுவதால், மூட்டுகள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
டயட்டை அனைவரிடமும் சொல்லுங்கள்
இது சற்று முட்டாள்தனமாக இருந்தாலும், நீங்கள் டயட்டில் இருந்தால், அதை உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள். இப்படி செய்வதால், நீங்கள் உங்களை அறியாமல் எதையேனும் சாப்பிட்டால், அதை அவர்கள் தடுத்து நினைவு கூறுவார்கள்.
தண்ணீர் அதிகம் குடிக்கவும்
தண்ணீர் குடிப்பது எடையைக் குறைக்க கூட உதவும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் கொழுப்புக்கள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மேலும் இது மிகவும் சிம்பிளான ஒன்றும் கூட.
பிடித்த உணவுகள்
மாதம் ஒருமுறை உங்களுக்கு பிடித்த உணவுகளை ஒரு கட்டு கட்டுங்கள். இதனால் மற்ற நாட்களில் அவற்றை உட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் போய்விடும். இதனால் உடலில் தேவையில்லாமல் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.
துணையுடன் உடலுறவு
ஆண்கள் மற்ற வேலைகளுக்கு நேரத்தை ஒதுக்குகிறார்களோ இல்லையோ, நிச்சயம் இதற்கு என்று ஒதுக்குவார்கள். ஆகவே உங்கள் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்ல முடியவில்லை என்று வருத்தப்படாமல், துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள். இதனால் உடற்பயிற்சிக்கு இணையான பலனைப் பெறலாம்.