ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள குறைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சமிபத்திய ஆய்வு ஒன்று வயதான அப்பாக்களுக்கு சாதகமான முடிவை வெளியிட்டுள்ளது. அப்படி என்ன தான் முடிவை வெளியிட்டுள்ளது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அமைதியான அப்பா
வயதான தந்தைகளுக்கு மனதில் ஒரு அமைதி இருக்கும். அவர்கள் தனது வயதிற்கு ஏற்ற பொறுமை மற்றும் தியாக உணர்வை கொண்டிருப்பார்கள். குழந்தைகளிடம் கனிவான முறையில் நடந்துகொள்வார்கள்.
கல்வியில் ஆர்வம்
வயதான அப்பாக்களை கொண்ட குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்ற. இவர்கள் செய்யக் கூடிய வேலையில் ஒரு தெளிவு மற்றும் கடமை உணர்ச்சி இருக்குமாம்.
அறிவாளிகள்
வயதான அப்பாக்களின் குழந்தைகள் பிறப்பிலேயே புத்திசாலியாக இருப்பார்களாம். வேலை மற்றும் படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய திறமை அவர்களிடத்தில் அதிகமாக இருக்குமாம்.
ஆய்வு
15,000 இரட்டை குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஐ.கியூ தேர்வில் வயதான அப்பாக்களின் குழந்தைகள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களாம்.
ஜீன்கள்
இவ்வாறு இவர்கள் திறமைசாலிகளாக இருப்பதற்கு அவர்களது ஜீன்கள் தான் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.