26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
0 non stick tawa
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!!!

தற்போது அனைத்து வீடுகளிலும் மண்பாத்திரம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் நாண் ஸ்டிக் பாத்திரம் இருக்கும். ஏனெனில் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்தால், எண்ணெய் அதிகம் சேர்க்கத் தேவையில்லை. இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற எண்ணம் தான் காரணம். ஆனால் இருப்பதிலேயே நாண் ஸ்டிக் பாத்திரம் தான் உடலுக்கு பல்வேறு தீவிரமான ஆபத்துக்களை விளைவிக்கும் என்பது தெரியுமா?

ஆம், நாண் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நாண் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும்.

இங்கு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

தைராய்டு

பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும். அதிலும் அன்றாடம் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும்.

அறிவாற்றல் குறைபாடுகள்

தொடர்ச்சியாக நாண் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும்.

எலும்பு நோய்கள்

தொடர்ந்து நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும்.

புற்றுநோய்

நாண் ஸ்டிக் தவாவில் உள்ள சேர்மம், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜெனிக் எனும் கூட்டு. ஆகவே இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், எளிதில் புற்றுநோய் உடலைத் தாக்கும்.

மாரடைப்பு

ஆய்வு ஒன்றில், நாண் ஸ்டிக்கில் உள்ள அமிலம் உடலில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் ட்ரை கிளிசரைடு அளவு அதிகரித்தால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் இருக்கும்.

இனப்பெருக்க பிரச்சனை

தற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம். குறிப்பாக நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குழந்தை பிறப்பு குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

நோயெதிர்ப்பு மண்டலம்

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை குறைந்துவிடும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, நோய்களின் தாக்கம் அதிகம் ஏற்படும்.

கல்லீரல்

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும் போது வெளிவரும் புகையானது, கல்லீரல் மற்றும் கணையத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சிறுநீரகம்

விலங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், நாண் ஸ்டிக் தவாவில் உள்ள அமிலமானது சிறுநீரகத்தையும் பாதிப்பதாக தெரிவித்துள்ளது.

கொலஸ்ட்ரால்

பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கக்கூடும். ஆகவே நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால், என்ன தான் எண்ணெய் சேர்க்காமல் சமைத்தாலும், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.

Related posts

உங்க ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்? இத படிங்க!

nathan

நீங்கள் நிறைய சாக்லேட் சாப்பிடுபவரா ??அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

உடல் பூஸ்ட்-அப் ஆக சாப்பிட வேண்டிய உணவுகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான கொண்டைக்கடலை கேரட் சாலட் – செய்வது எப்படி?

nathan

கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம் வரும்: எச்சரிக்கை ரிப்போர்ட்

nathan

இந்த ஒரு டம்ளர் டீ, 10 டம்ளர் க்ரீன் டீக்கு சமம் தெரியுமா?படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா சத்தான டிபன் ராகி உப்புமா செய்வது எப்படி?

nathan

வெள்ளை சக்கரையில் இவ்வளவு ஆபத்து இருக்கா?

nathan

சூப்பரான கம்பு புட்டு

nathan