29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
babygender 02 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில வழிமுறைகள்

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால் போதும், பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என அனைவரும் விவாதிக்க தொடங்கிவிடுவார்கள். சிலர் ஆண் குழந்தை என்று வாதிடுவார்கள், மற்றும் சிலர் பெண் குழந்தை என்று வாதிடுவார்கள். கர்ப்பமாக உள்ள பெண்ணின் வீட்டில் இது போன்ற சுவாரசியமன விவாதங்கள் நடப்பது இயல்பு தான். பழங்காலத்தில் பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொண்டனர். அவை என்னவென்று பார்ப்போம்.

1. சருமத்தில் உண்டாகும் மாற்றங்கள் பழங்காலத்தில் பெண்கள் பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க தங்களது சருமத்தை உற்று நோக்கினர். பெண்களின் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் பிறக்க போவது பெண் குழந்தை, வறண்ட சருமமாக இருந்தால், பிறக்கப்போவது ஆண் குழந்தை என கணித்தனர்.

2. முகப்பருக்கள் பெண் குழந்தையாக இருந்தால், முகத்தில் முகப்பருக்கள் அதிகமாக தோன்றும். ஆண் குழந்தையாக இருந்தால், உங்களுக்கு எப்போதும் இருப்பது போன்று தான் இருக்கும்

3. முகத்தில் பிரகாசம் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் முகம் பொதுவாகவே பிரகாசமாக இருக்கும். அதிலும் ஆண் குழந்தையை சுமக்கும் தாயின் முகம் மிக அதிகமாக ஜொலிக்குமாம்.

4. தொப்புள் சிலருக்கு தொப்புளுக்கு கிழே ஒரு கருமை நிற கோடு இருக்கும். அந்த கோடு தொப்புள் வரை நீண்டால் பிறக்க போவது பெண் குழந்தை என்றும், தொப்புளுக்கு மேலே வரை நீண்டால் பிறக்கபோவது ஆண் குழந்தை என்றும் கணிப்புகள் இருந்தது

5. பேக்கிங் சோடா பரிசோதனை இந்த பேக்கிங் சோடா பரிசோதனையின் மூலம் பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை 80% வரை துல்லியமாக கணக்கிட முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, சிறிதளவு பேக்கிங் சோடவை உங்களது சிறுநீரில் கலக்க வேண்டும் இவ்வாறு செய்யும் போது நீர் குமிழ்கள் தோன்றினாலோ அல்லது நுரைத்தாலோ பிறக்க போவது ஆண் குழந்தை. எந்த மாற்றமும் தோன்றவில்லை என்றால் பிறக்க போவது பெண்குழந்தை.

6. தலைமுடி பரிசோதனை பெண் குழந்தையை கருவில் சுமக்கும் பெண்களுக்கு தலைமுடி மெல்லியதாகவும் பொலிவிழந்தும் இருக்குமாம். ஆண் குழந்தையை கருவில் சுமக்கும் பெண்களுக்கு தலைமுடி அடர்த்தியாகவும் மினுமினுப்பாகவும் காணப்படுமாம்.

7. உடலில் உள்ள முடிகள் உங்களது உடற்பகுதியில் காணப்படும் முடிகள் வேகமாக வளர்ந்தால் உங்கள் கருவில் இருப்பது ஆண் குழந்தை. உங்கள் உடலில் வளரும் முடியில் எந்தவித மாற்றத்தையும் உணரமுடியவில்லை என்றால் பிறக்கபோவது பெண் குழந்தை.

8. உடல் எடை மாற்றம் சில பெண்கள் தங்களது வயிற்று பகுதியில் மட்டும் உடல் எடை அதிகரிப்பதை உணருவார்கள், ஆனால் சில பெண்கள் தங்களது உடல் முழுவதும் எடை அதிகரிப்பதை உணருவார்கள். உங்கள் உடலின் எடை முழுவதும் வயிற்றுப்பகுதியில் கூடினால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை, உடலின் அனைத்து பகுதிகளிலும் எடை கூடினால் பிறக்கப்போவது பெண் குழந்தை

9. காலின் வெப்பநிலை உங்களது காலின் வெப்பநிலை எப்போதும் இருப்பதை விட குளிர்ச்சியாக இருந்தால், உங்களது கருவில் இருப்பது ஆண் குழந்தை. எந்த ஒரு மாற்றத்தையும் நீங்கள் உணரவில்லை என்றால் பிறக்கப்போவது பெண் குழந்தை

10. பாதங்களின் வளர்ச்சி சில பெண்கள் கர்ப்பகாலங்களில் பாதங்களில் வளர்ச்சி ஏற்படுவதை உணருவார்கள். ஆண் குழந்தைகளை தனது கருவில் சுமக்கும் தாய்களுக்கு பாதம் அரை இன்ஞ் அளவு வளரும். ஆனால் பெண் குழந்தைகளை கருவில் சுமக்கு தாய்களுக்கு பாதம் வளராது.

11. உணவில் விருப்பம் இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், வயிற்றில் வளர்வது பெண் குழந்தை. உப்பு உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை

12. வயிறு உங்களது வயிறு பெரிதாக இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை. சிறிதாக இருந்தால் பிறக்கப்போவது ஆண் குழந்தை.

13. தலைவலி தலைவலியை வைத்துக்கூட பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை முடிவு செய்யலாம். தலைவலி ஏற்பட்டால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை. தலைவலி இல்லை என்றால் பிறக்கப்போவது பெண் குழந்தை.

14. தூங்கும் நிலை நீங்கள் இயற்கையாக தூங்கும் நிலையை வைத்துக்கூட உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்கலாம். நீங்கள் இடது பக்கமாக தூங்கினால், ஆண் குழந்தை. வலது பக்கமாக தூங்கினால் பெண் குழந்தை.

15. மார்பகத்தின் காம்புகள் உங்கள் மார்பகத்தின் காம்புகளின் நிறத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை. கருமையான நிறத்திற்கு மாறினால் உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை.

16.மார்பகத்தின் அளவு உங்களது இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை. வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக இருந்தால் பிறக்கப்போவது ஆண் குழந்தை.

Related posts

ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி!!

nathan

ஆண்களின் விந்தணு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

nathan

மது உங்களைக் குடிக்கிறதா? அவசியம் படிங்க!…

nathan

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது ?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இதை இரண்டு முறை செய்யாவிட்டால் சிக்கல் தான்!

nathan

திருமணத்திற்கு முன்பே உறவு வைக்க நினைக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..!!தெரிந்துகொள்வோமா?

nathan

இப்படி யூஸ் பண்ணுங்க. நாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா ?

nathan

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டியவை..!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan