30.3 C
Chennai
Sunday, May 26, 2024
p56
மருத்துவ குறிப்பு

இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் நாவல்

ரத்தத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி இன்று பார்ப்போம்: நாவல் பழம் நமது தமிழ் வரலாற்றில் நீண்ட நெடிய தொடர்பு கொண்டதாகும். அவ்வை பாட்டி வெயில் காலத்தில் தனது தாகத்தால் தவித்த போது நாவல் பழத்தை சாப்பிட்ட கதைகளை நாம் அறிவோம். தமிழ் நிலத்தின் மரமான நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை தற்போது பார்க்கலாம். நாவல் பழம் நல்ல மருந்தாகவும், உணவாகவும் பயன்படக் கூடியது.

நாவல் பழத்தை பயன்படுத்தி வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, நாள்பட்ட கழிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தலாம். இதற்காக நாவல் பழம், இலவங்க பட்டை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சிறிது பட்டை, கால் ஸ்பூன் ஏல அரிசியுடன், நாவல் பழத்தை நன்றாக அரைத்த விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் இதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து நாவல் தேநீரை தயாரித்துக் கொள்ள வேண்டும். இதை நாம் வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்த்து கொடுத்தால் மிகவும் விரும்பக் கூடியதாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு வயிற்று கோளாறுகளை சரி செய்து விடும்.

நாவல் மரத்தின் இலை, காய், பழம், மரப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டு விளங்கக் கூடியது. ஜாவா புரூட், பிளாக் புரூட் என்று ஆங்கிலத்தில் நாவல் பழம் அழைக்கப்படுகிறது. இதன் இலை மற்றும் பழங்கள் ஆகியவை வயிற்று கோளாறுகளை சரி செய்யக் கூடியது. வயிற்று புண்களை ஆற்றக் கூடியது.

சீதபேதி வந்தால் நாவல் சர்பத்தை வாங்கி பருகினால் சரி செய்யும் வழக்கம் நம்மிடம் காணப்பட்டது. சிறுநீரை வெளித்தள்ள கூடியது. உடலில் உள்ள சர்க்கரையை தணிக்கக் கூடியது. அதே போல் நாவல் பழத்தின் கொட்டையை பயன்படுத்தி டயாபடீஸ் என்று சொல்லக் கூடிய சர்க்கரை வியாதிக்கு தேவையான மருந்தை தயார் செய்யலாம். பிளட் சுகர் என்று சொல்லக் கூடிய ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் குணம் நாவலுக்கு உள்ளது.

நாவல் பழத்தை சாப்பிட்ட பிறகு அதில் இருக்கும் கொட்டையை எடுத்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு அதை பொடி செய்து பவுடராக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நாவல் கொட்டை பொடி, வெந்தய பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை கொண்டு இதை தயாரிக்கலாம். நாவல் பொடியை 4 கிராம், அரை ஸ்பூன் அளவு வெந்தய பொடி, கால் ஸ்பூன் மஞ்சள் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றில் தேவையான அளவு தண்ணீர் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இதை முறையாக பருகுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். மேலும் இதை சூரணமாகவோ, வேறு வடிவிலோ கூட தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக நாவல் விளங்குகிறது.
p56

Related posts

கட்டிகளால் கவலை வேண்டாம்!மருத்துவர் கூறும் தகவல்கள்…

nathan

காய்ச்சல் மற்றும் சளியை தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டியவை!

nathan

குறைப்பிரசவத்தில பிறந்த குழந்தையை எப்படி பார்த்துக்கணும் தெரிஞ்சுக்கோங்க.

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்களை தாக்கும் மூட்டு வலி: தவிர்க்க வழிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் மாத்திரம் முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம்! ஏன் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…வயிற்றில் குழந்தை எப்போது உதைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

உபயோகமான‌ பாட்டியின் சில‌ வீட்டு மருத்துவக் குறிப்புகள்! இய‌ற்கை வைத்தியம்!

nathan

ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு அடிக்கடி தலைவலி மண்டைய பொளக்குதா?… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan