முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி இலை – 1 கப்
சிறிய முள்ளங்கி – 1
சீரகம் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – சிறிது,
மிளகுத்தூள் – சிறிது, உப்பு – தேவைக்கு
மஞ்சள்தூள் – சிறிது, எண்ணெய் – 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
முள்ளங்கி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து சீரகத்தை போட்டு பொரிந்ததும், முள்ளங்கி இலை, முள்ளங்கி இரண்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, சூப் பதத்திற்கு தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.
சூடாக பரிமாறவும். சத்தான முள்ளங்கி சூப் ரெடி