வெங்காயம் உரிக்கும் போது கண்களில் ஏற்படும் எரிச்சலால் தண்ணீர் வருவது இயல்பு. வெங்காயத்தில் இருந்து வெளியாகும் என்ஸைம்கள் தான் கண்ணீர் வருவதற்கு காரணம்.
இதனால் வெங்காயத்தின் தோலை உரிக்கவே அனைவருக்கும் எரிச்சலாக இருக்கும். யாராவது இந்த வெங்காயத்தை மட்டும் வெட்டி தரக்கூடாதா என்ற மனநிலை இருக்கும்.
ஆனால் இப்போது அந்த கவலையே இல்லை. வெங்காயம் உரிக்கும் போது இப்படி செய்தால் கண்களில் இருந்து தண்ணீரே வராதாம்..
வெங்காயத்தை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து விடவும். அப்படி செய்வதால் கண்ணில் எரிச்சல் தோன்றுவது இல்லை. ஏனெனில் வெங்காயம் நனைந்திருப்பதால் அந்த ஈரப்பதத்தை தாண்டி அந்த வாயு காற்றுக்குள் புகாது.
வெங்காயம் வெட்டும் பலகையில் லேசாக வினிகரை பூசி அதன் மேல் வைத்து வெட்டினால் வெளியேறும் வாயுவின் அமிலத்தன்மை மாறிவிடும்.
வெங்காயத்தை நறுக்கும் முன் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் பிரீஸரில் வைத்து விட்டு அதன் பிறகு நறுக்கினால் வெளியேறும் சல்பாக்சிடின் அளவு குறைந்து விடும். இதனால் அதன் அமிலத்தன்மையும் மட்டுப்படுவதால் அது நம் கண்களையும் தாக்காமல் பாதுகாக்கிறது.
வெங்காயத்தை நறுக்கும் போது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி பக்கத்தில் வைத்து கொண்டு வெங்காயத்தை நறுக்கினால் அதலில் இருந்து வெளியேறும் வாயுவின் அமிலத்தன்மை மாறிவிடும்.
கொதித்த நீரினை ஒரு பாத்திரத்தில் வைத்து கொண்டு வெங்காயத்தை நறுக்கலாம். அவ்வாறு செய்து வந்தால் நம் கண்ணை பாதுகாத்து கண்ணீர் வராமல் தடுக்கின்றது.