தாமரை விதை பெரும்பாலும் விரதத்தின்போது மக்களால் உண்ணப்படும் ஒரு உணவு.
இதில் நிறைந்துள்ள ஆற்றல் விரத நேரங்களில் மக்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இது எடை இழப்பிலும் அதிக அளவில் உதவுகிறது. நீண்ட நேரம் பசியை தூண்டாமல் இருப்பதன் மூலம் நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது
இது எடை இழப்பிலும் உதவுகிறது, அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் .
- இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது.
- இதிலுள்ள புரதச்சத்து நீண்ட நேரம் நமக்கு பசியை ஏற்படுத்தாது.
- பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்ளுவதிலுருந்து நம்மை பாதுகாக்கறது. இதனால் எடையும் குறைகின்றது.
- இதில் குறைந்த அளவில் கிளைசெமிக் குறியீடு என் உள்ளது. ஆரோக்கியமான ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துவதில் இது பெரும் பங்கினை கொண்டுள்ளன என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.