33.3 C
Chennai
Saturday, May 18, 2024
1060131957d7148d4de3ec10e2f9667186ee1c954795886305
ஆரோக்கிய உணவு

அடேங்கப்பா மாதுளம்பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா..?

மாதுளம்பழத்தைப் போலவே, அதன் தோலும் அதிகப் பலன் கொண்டது. பெரும்பாலும் இதைச் சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம்.

மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இந்தப் பொடியை நீருடன் கலந்து கொப்பளிக்க, வாய்துர்நாற்றம் நீங்கும்.

1060131957d7148d4de3ec10e2f9667186ee1c954795886305

மாதுளம்பழத் தோலின் பொடியுடன், பால், ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம். ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன் படுத்தலாம்.

மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு தடைபடும்.

மாதுளைப் பழத்தின் விதைகள் ஒரு சிறு மூலக்கூறு அமைப்பினைக் கொண்டிருக்கின்றன.

,இத்தகைய மூலக்கூறு அமைப்பானது தோலில் ஊடுருவி எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைய வழிவகை செய்கிறது. எனவே இப்பழம் உலர்ந்த மற்றும் சீரற்ற தோலுக்கு அழகு சேர்க்கிறது. மேலும் சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

வைட்டமின் ‘ஈ’ மாதுளைப் பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. மாதுளை பழமானது பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ‘சி’, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்துப் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் கருவுற்றப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாதுளைப்பழம் பயன்படுகிறது.

கர்ப்பகாலத்தின்போது பருகப்படும் மாதுளைச் சாறு தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கப் பயன்படுகிறது.

மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.

மாதுளம்பழத் தோலைச் சாப்பிட்டால், இதய நோய்கள் வராமல் காக்கும். எலும்பை வலுவாக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வாழைப்பழ தோலை கொதிக்க வைத்த நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா?அப்ப இத படிங்க!

nathan

சர்க்கரை நோயை உடனே விரட்ட வேண்டுமா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் மகத்துவமிக்க பலன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்தய டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?

nathan

வாங்க தெரிஞ்சுக்கலாம்… யோகர்ட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?

nathan

சூப்பரான நார்த்தங்காய் சாதம்

nathan

காலையில் இதில் 1 ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே வராதாம்.. சூப்பர் டிப்ஸ்..

nathan

இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கொழுப்பைக் குறைக்க தேங்காய்; இளமை நீட்டிக்க கொப்பரை; உடலுக்கு ஊட்டமளிக்க நீராபானம்!

nathan