23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
2 diabetes
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த உணவுகள்! தெரிந்துகொள்வோமா?

உணவும் இரத்த சர்க்கரையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை ஆகும். சரியான உணவை நீங்கள் உட்கொண்டால் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் சரியாக இருக்கும். நீரழிவு நோய்க்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் சரியான உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் காரணமாக இரத்த சர்க்கரை அளவு மட்டுமல்லாமல் உடலின் மற்ற முக்கிய பாகங்களான சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலமும் கூட பாதிக்கப்படுகிறது. இது மட்டும் இன்றி, பற்கள், ஈறு, சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த கோளாறுகளும் நீரிழிவு நோய் காரணமாக ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தவறினால் நிறைய உடல்நல குறைப்பாடுகள் ஏற்படும் என நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவிலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மைதா கலந்த உணவுகளை சாப்பிடுவதை அறவே நிறுத்தி விடுங்கள். மைதா நிரந்த உணவுகள் நீரிழிவு நோய்க்கு பரம விரோதி ஆகும். காலை வேளைகளில் வேக வைத்த காய்கறிகள், பழங்களை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவறாது காலையும் மாலையும் குறைந்தது ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். சரி இனி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் உணவுகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்….

பீன்ஸ்

நீரிழிவு நோய்க்கு காய்கறிகள் சிறந்த உணவாகும். அதிலும் பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் சுண்டல் போன்ற உணவுகளில் குறைந்த கொழுப்பும் நிரந்த கலோரிகளும் உள்ளன. இதில் இருக்கின்ற புரதம் மற்றும் நார்ச்சத்து உடல் நலத்திற்கு நல்லது. இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க வெகுவாக உதவுகிறது.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளான கீரை, முட்டைக்கோஸ், பசலைக் கீரை, கொத்தமல்லி, வெள்ளரி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் பசியின்மையை குறைக்க உதவுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவெனில், காய்கறிகளில் இன்சுலின் அளவை மேம்படுத்தும் தன்மை உள்ளதால். இவை நீரிழிவு நோயை கட்டுப்படுதுகின்றது என கூறுகின்றனர்.

ஓட்ஸ்

நீரிழிவு நோய் உள்ளவர்கள், உங்களது நாள் நன்றாக துவங்க வேண்டும் எனில் ஓட்ஸ் உணவை உட்கொள்வதன் மூலம் அதை நிறைவேற்றிட முடியும். ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் பி, ஈ மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது,

ஆப்பிள்

சமீபத்திய ஆராய்ச்சியில் அதிக எண்ணிகையில் ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த இறப்புகள் குறைவாய் ஏற்படுகிறது எனக் கண்டுப்பிடுத்துள்ளனர்.

வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள்

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு வைட்டமின் சி சத்து குறைவாய் உள்ளதாக ஓர் ஆராய்ச்சியில் கண்டுப்பிடித்துள்ளார்கள். எனவே வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டுகள் உடலில் இன்சுலின் சுரக்க உதவுகிறது. இதனால்,நீரிழிவு நோய் ஏற்படாமல் காக்க முடியும். மற்றும் சாக்லேட் இரத்தக்கொதிப்பையும், தீயக் கொழுப்பு சத்துக்களையும் குறைக்க உதவுகிறது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள ஒமேகா 9 மற்றும் ஒமேகா 3’யின் சத்துகளும் இரத்த நாளங்களுக்கு வலுவளித்து இரத்த ஓட்டத்தை சீராக்கிட உதவுகிறது. இரத்த ஓட்டம் சீராக இருந்தால் நீரழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

க்ரீன் டீ

தினமும் க்ரீன் டீ குடிப்பதும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் நல்ல வீட்டு தீர்வு ஆகும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

Related posts

சூப்பரான பொட்டுக்கடலை உருண்டை எப்படி செய்வது தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா திராட்சையை அடிக்கடி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் புளியந்தளிர்

nathan

ஆரோக்கியத்துக்கு அவகேடோ!

nathan

வாழ்நாள் முழுவதும் நீரிழிவு, சிறுநீரக நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்

nathan

6ம் எண்ணில் பிறத்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சுவையான கேழ்வரகு வெஜிடபிள் சூப்

nathan

மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

nathan