29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
முளைகட்டிய பயறு a
ஆரோக்கிய உணவு

தண்ணீரில் ஊறவைத்த பயறை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாமா?

முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பயறு வகையை நீரில் ஊற வைத்து, பின்பு முளைக்க வைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் பெரிதாகவும் நினைக்க வேண்டியதில்லை.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில், எளிதில் கிடைக்கும் பயறு வகைகளையே முளைகட்டச்செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் பாசிப்பயறு, கொண்டைக் கடலை, தட்டைப்பயறு, உளுத்தம்பயறு, சோயா பயறு இந்த ஐந்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

‘முளைகட்டிய பயறுகளுக்கு அப்படி என்ன சிறப்பு’ என்ற வினா நம்மிடையே எழக்கூடும். அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருளான முளைகட்டிய உணவில் சாதாரண பயறுகளைவிட ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘கே’ இவற்றில் ஏராளமாகப் பொதிந்துள்ளன. புரதச்சத்து இவற்றில் அதிகமாக உள்ளது. நியாசின், தையமின் போன்ற சத்துகளுடன் ஆன்டிஆக்ஸிடென்டுகளும் இவற்றில் அதிக அளவு உள்ளன. மேலும், ஒமேகா அமிலம், இரும்புச் சத்து, துத்தநாகம் போன்ற சத்துகளும் இவற்றில் நிறைந்து உள்ளன. பயறுகள், தானியங்களை முளைகட்ட வைப்பது மிகவும் சிரமமான காரியமல்ல.

அவற்றை எட்டு முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

நன்கு ஊறிய பயறுகளில் தண்ணீரை வடித்துவிட்டு, அவற்றைப் பருத்தித் துணியில் கட்டி தனியாக வைத்துவிடவேண்டும்.

அடுத்த 12 மணி நேரத்துக்குள் அவை முளைகட்ட ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம்.

சுவையாக இருக்கும். பச்சை வாசனை பிடிக்காதவர்கள், வாணலியில் சிறிது எண்ணெய்யைக் காயவைத்து அதில் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, முளைகட்டிய பயறையும் சேர்த்து கிளறி உடனே இறக்கிவிட வேண்டும்.

முளைகட்டிய பயறுகளை அதிகம் வேகவைப்பதோ அல்லது பொறிப்பதோ அவற்றில் உள்ள சத்துகளைச் சிதைத்துவிடும்.

பொதுவாக, முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. பலர் காலை உணவாகவோ அல்லது நொறுக்குத் தீனியாகவோ முளைகட்டிய பயறுகளை உட்கொள்கின்றனர்.

அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. இவற் றில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கின்றன. இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

இவற்றில் இருக்கும் வைட்டமின் ‘பி’, நியாசின், தைய மின் போன்ற சத்துகள் உடலில் ரத்த விருத்தியையும் ஏற்படுத்து கின்றன. உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவற்றைத் தவிர்க்க இவை உதவக்கூடும்.

வைட்டமின் ‘இ’ சத்து இவற் றில் அதிகமிருப்பதால் கருப்பை, சினைப்பையை சீராக இயங்கச் செய்யும். முளைகட்டிய பாசிப்பயறில் அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு அது நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.

சருமப் பளபளப்புக்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முளைகட்டிய வெந் தயத்தை ஒரு கிண்ணம் அளவுக்கு சாப்பிட்டு வர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

முளைகட்டிய கொள்ளு உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொப்பை யைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கிறது. உடல் மெலிவாக இருப்பவர்கள் தினமும் 100 கிராம் முளைகட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வர, உடல் எடை கூடும்; உடல் வலுப்பெறும்.

முளைகட்டிய கம்பு உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும். முளைகட்டிய கம்புடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்; அரைத்து, காய்ச்சி கஞ்சியாகவும் குடிக்கலாம்.

கேழ்வரகை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைகட்ட வைக்கலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். அரைத்துப் பாலாகவும், கூழாகவும், கஞ்சியாகவும் சாப்பிடலாம். இது உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.

முளைகட்டிய பயறுகள், தானியங்களின் செரிமானம் தாமதப்படும் என்பதால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்களும் வயதானவர்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இவற்றை உட்கொள்ளலாம்.

Related posts

ஆண்களுக்கு அதிக சக்திதரும் நீர்முள்ளி பால்

nathan

உங்களுக்கு தெரியுமா சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் !! அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…உடற்பயிற்சி செய்த பின் நிச்சயம் தவிர்க்க வேண்டியவைகள்!!!

nathan

கெட்டுப்போகாமல் இருக்க பன்றி இறைச்சி கலந்து விற்கப்படும் சைவ உணவுகள் – அதிர்ச்சி!!!

nathan

கவுனி அரிசி உருண்டை

nathan

கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டா?

nathan

உங்களுக்கு தெரியுமா இத்தனை சத்துக்களை கொண்டுள்ளதா சர்க்கரை வள்ளி கிழங்கு…..?

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

nathan