30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

வீட்டு பக்கத்திலேயே வளரும் கீரை! 10 நோய்களை அடித்து விரட்டும் அற்புதம்

மிக சர்வசாதாரணமாக சாலையோரங்களில் காணப்படும் செடிகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன, அந்த வகையில் களைச்செடி என நாம் கருதும் மூலிகை செடி தான் மூக்கிரட்டை கீரை.

இன்றும் கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் காணப்படும் இந்த கீரையில் மருத்துவ குணங்கள் அதிகம்.

அது என்னென்ன, எப்படி சாப்பிட்டால் நாம் பலன்களை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

எந்தெந்த நோய்களுக்கு மருந்து?
இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாகிறது.

 

பயன்படுத்துவது எப்படி?
மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர்களை காயவைத்து, பொடி செய்து நீரில் வேகவைத்து ஆற்றி குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகள், கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.

மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்கு காயவைத்து, அரைத்து பொடியாக்கி அதை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் நீக்கும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்! நரம்பு தளர்ச்சியாககூட இருக்கலாம்

மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும்.

மூக்கிரட்டைக் கீரையை அம்மியில் வைத்து மைய அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும்.

 

மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

உணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, நன்றாக காய்ந்த மூக்கிரட்டை வேரை இடித்து, ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.

மூக்கிரட்டை வேரை லேசாக இடித்து, விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலம் இளகும். உடலில் தங்கியிருக்கும் நச்சு நீர், கிருமிகள் வெளியேறி சரும நோய்கள், வாத நோய்கள் விலகும். எடை குறைந்து அழகு மிளிரும்.

Related posts

வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு

nathan

உம்களுக்கு தெரியுமா தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை..!!

nathan

மருத்துவ குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இவ்வளவு சத்துக்களை கொண்டதா நிலக்கடலை….!

nathan

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

கீரையின் உணவின் மருத்துவ குணம்

nathan

மரவள்ளி கிழங்கு நன்மைகள் – maravalli kilangu benefits

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…புரோட்டீன் பவுடரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan