29.2 C
Chennai
Tuesday, May 21, 2024
NTLRG 20200330131

ஷாக் ஆகாதீங்க…! நடிகை ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பா?

அடிக்கடி லண்டன் சென்று திரும்பும் நடிகை, ராதிகா ஆப்தேவை, தனிமையில் இருக்கும்படி அவரது நலம் விரும்பிகளும், மருத்துவர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.

தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. சில படங்களில், ‘டாப்லெஸ்’ ஆகவும், நிர்வாண காட்சிகளில் நடித்தும், சர்ச்சையான படங்களை வெளியிட்டு, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியவர். தமிழில், ரஜினியுடன், கபாலி, பிரகாஷ் ராஜுடன், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர், பெனடிக்ட் டெய்லர்.

அடிக்கடி இந்தியாவுக்கும் லண்டனுக்கும் விமானத்தில் பறக்கும் ராதிகா ஆப்தேவை, அவரது நலம் விரும்பிகள், கொரோனா பரவலை சுட்டிகாட்டி, எச்சரிக்கையாக இருக்கும்படி, அன்பு கட்டளையிட்டனர்.NTLRG 20200330131

இந்நிலையில், சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ள தன் படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். அதில், ‛தனக்கு கொரோனா இல்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ‛இடது விரலில் ஏற்பட்ட காயத்திற்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளேன்’ என, பதிலளித்துள்ளார்.

கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராதிகா ஆப்தே இன்ஸடாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது ‛மாஸ்க்’ அணிந்த படங்கள் சமூகவலைதளத்தில் பரவி, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவலை பரப்பியுள்ளன.