25.9 C
Chennai
Wednesday, Jan 1, 2025
workingwoman 24
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்தியாவில் 35% தாய்மார்கள் இரண்டாவது குழந்தை பெற விருப்பமில்லையாம்!

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் 35% தாய்மார்கள் இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க விரும்புவதில்லையென ஒரு ஆய்வு சொல்கிறது. தங்கள் பெற்றோரையும் வளரும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும் இக்காலகட்டத்தில் ஏற்படும் குடும்பச் செலவுகளும் அந்த முடிவையை எடுப்பதற்கான காரணமாக அமைந்து விடுகிறது.

A Survey Indicates That 35% Working Mothers Don’t Prefer
மே – 17இல் கொண்டாடப்படும் அன்னையர் தினத்தை முன்னிட்டு, அசோச்சம் என்ற குழுமத்தின் சமுதாய முன்னேற்ற பிரிவின் பிரிதிநிதிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். சுமார் 1500 பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது .அவர்கள் அனைவரும் ஒரு குழந்தை பெற்று பணிக்குச் செல்லும் இயல்பை உடையவர்களாவர்.

நவீன உலகில் திருமண வாழ்க்கை தரும் மன அழுத்தம், வேலைப்பழு மற்றும் குழந்தை வளர்ப்புக்கு தேவைப்படும் அதிக பணம் ஆகிய காரணங்களால் அந்த பெண்கள் இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லையென அந்த ஆய்வின் முடிவுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

மேலும் அந்த ஆய்வு இந்தியாவின் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட்டது. அகமதாபாத், பெங்களூரு , சென்னை, டெல்லி, ஹைதராபாத், இந்தோர், ஜெய்ப்பூர் , கொல்கட்டா, லக்னவ் மற்றும் மும்பய் மாநகரில் இந்த ஆய்வு உட்படுத்தப்பட்டது. ஒரு மாத ஆராய்ச்சி முடிவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தையிடம் செலவிட எத்தனை நேரம் எடுத்துக் கொள்கின்றனர் என்பதை ஆராய்ச்சி செய்துள்ளனர்.

மேலும் இப்பெண்கள் இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க விரும்புகின்றனரா? என்ற கேள்வியையும் அப்படி இல்லையெனில் அதற்கான காரணத்தையையும் ஆய்வில் பெற்றுள்ளனர்.

A Survey Indicates That 35% Working Mothers Don’t Prefer
அந்த ஆய்வில் சுமார் 500 பெண்கள், இரண்டாவது குழந்தைக்கு முற்பட்டால் தங்கள் வேலையில் பதவி உயர்வு பெற அது தடைக்கல்லாக அமைந்துவிடும் என அஞ்சுகின்றனர். இரண்டாவது குழந்தைக்கான பேறுகால விடுப்பு எடுப்பதினால் அந்த பதவி உயர்வு பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன்வைக்கின்றனர்.

A Survey Indicates That 35% Working Mothers Don’t Prefer
மேலும் அந்த ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் ஒரு குழந்தையே போதும் என்ற முடிவிற்கான பல காரணங்களை முன் வைக்கின்றனர். இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனித்து கொள்ளும் தன்மை இரட்டிப்பு சுமையை கொடுக்கும். மேலும் ஆண் – பெண் பாலினம் சார்ந்த வேறுபாடுகளை தவிர்க்க இயலாத நிலைக்கு அந்த தாய்மார்கள் தள்ளப்படுகின்றனர்.

மேலும் அந்த ஆய்வு முடிவில், கணவன்மார்கள் தங்களின் ஒரு குழந்தை முடிவை பெரும்பாலும் ஆதரிப்பதில்லை என்பதையும் அந்த பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

அரசாங்கம் சில வழிமுறைகளை பின்பற்றி,ஒரு குழந்தை போதும் என்ற மனநிலையில் உள்ள பெண்களை ஊக்குவிக்க வேண்டுமென விரும்புகின்றனர். வரிச்சலுகைகள் கொடுப்பதனால் நல்ல பலன் கிடைக்கும் என்று அந்த ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் குறிப்பிடுகின்றனர்.

A Survey Indicates That 35% Working Mothers Don’t Prefer
அந்த ஆய்வில் சுமார் 65% பெண்கள் மாற்று கருத்து ஒன்றை பதிவு செய்கின்றனர். இவ்வுலகில் தங்கள் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு சிரமப்பட அவர்கள் விரும்பவில்லை. அந்த குழந்தை உடன்பிறந்த மற்ற குழந்தையின் மூலம் சகோதர பாசத்தை அறிந்து கொள்ள முடியும். தோழமையின் ஆனந்தத்தை பிற்காலத்தில் அக்குழந்தைகள் பெற்று நலமுடன் வாழ அது வழி செய்யும் என அந்த பெண்கள் தங்கள் கருத்தை ஆய்வு முடிவில் தெரிவித்தனர்.

Related posts

ஊறுகாய் இல்லாம சாப்பாடு இறங்காதா உங்களுக்கு..? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

மேகி உண்ணுவது உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதா?

nathan

உங்களின் பிறந்த ராசிப்படி எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் எப்படி உருவாகும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்க வீட்டு குழந்தைகள் அடிக்கடி சண்டை போடறாங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உடல் எடையை கட்டுக்குள் வைக்க!… இதை மட்டும் சரியாக செய்தாலே போதும்

nathan

பணம் கையில சேரமாட்டீங்குதா? எனவே இந்த தவறை செய்யாதீர்கள்…

nathan

இதை படிங்க கோடைகாலத்தில் லெகிங்ஸ் மற்றும் ஜீன்சை தவிர்க்கவும்; காரணம் தெரியுமா?

nathan

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வாஸ்து கூறும் இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்கள்!

nathan

டென்ஷன், மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் எல்லாமே உங்களை விட்டு ஓடிப்போக வேண்டுமா?

nathan