26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
millet veg noodles. L styvpf
ஆரோக்கிய உணவு

சிறுதானிய வெஜ் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள் :

சிறுதானிய சத்து மாவு – ஒரு கப்,

விரும்பிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 2
தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை -சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

காய்கறிகள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெறும் வாணலியில் சிறுதானிய சத்துமாவை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

பின்னர் இதனுடன் உப்பு, சூடான தண்ணீர் விட்டு இடியாப்ப மாவு பதத்துக்கு பிசையவும்.

மாவை இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக விட்டு எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு உப்பு, தக்காளி சாஸ், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். மசாலா எல்லாம் நூடுல்ஸ் உடன் சேர்ந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சிறுதானிய வெஜ் நூடுல்ஸ் ரெடி.

Related posts

சுவையான ஓட்ஸ் இட்லி

nathan

ஆண்கள் விளாம்பழம் சாப்பிடலாமா?

nathan

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி

nathan

முருங்கை கீரை எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படும்!!

nathan

தெரிஞ்சிக்கங்க… சப்ஜா விதைகள் எடுத்து கொள்வதனால் இத்தனை பயனா?

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

கருப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

ஆயுர்வேதத்தின் படி உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan