23.6 C
Chennai
Friday, Dec 12, 2025
women health
ஆரோக்கியம் குறிப்புகள்

ஜாக் கிரதை! உள்ளாடையில் இந்த சிறிய தவறை செய்கிறீர்களா?

உள்ளாடை என்றாலே மிகவும் ரகசியமான விஷயம் என்று பலருக்கும் தோன்றும். பொது வெளியில் அதைப் பற்றி பேசுவது கூட நாகரீகமாக இருக்காது என்று கருதுவார்கள்.

நம் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உள்ளாடைகள் விஷயத்தில் நாம் செய்யும் சில தவறுகள் நம்முடைய உடல் நலத்துக்கு கேடு வைப்பதாக மாறி விடுகிறது.

சிலர் போட்ட உள்ளாடையையே மீண்டும் மீண்டும் போடுவார்கள். அதுவும் லாக் டவுன் நேரத்தில் போட்ட உள்ளாடையைத் துவைக்காமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

சிலர் உள்ளாடையை துவைத்தும் சரியாக காய வைப்பது இல்லை. வெளியில் வெயிலில் காய வைத்தால் மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று வீட்டுக்குள், குளியல் அறைக்குள் காய வைத்து மடித்து வைத்துவிடுவார்கள். இதனால் உள்ளாடையில் பூஞ்சை, பாக்டீரியா வேகமாக வளரும். வெயிலில் உலர்த்தி பயன்படுத்துவது நல்லது.

சிலர் வியர்க்க வேலை செய்த பிறகு உள்ளாடைகளை மாற்றாமல் அப்படியே இருப்பார்கள். வியர்வை காரணமாக பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் செழித்து வளரும். இது அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படுத்திவிடும்.

சிலர் மிக இறுக்கமான உள்ளாடைகள் அணிவார்கள். இதுவும் தவறானது. இறுக்கமான உள்ளாடை அணிவது சருமத்தில் அரிப்பு உள்ளிட்ட பிரச்னையை ஏற்படுத்தலாம்.

மேலும் பிறப்புறுப்பு பகுதிக்கான ரத்த ஓட்டத்தையும் தடுத்து நிறுத்தலாம். அந்த பகுதி நரம்புகள் மீது அதீத அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

சிலர் ஃபேன்சியாக இருக்கும் என்று உடலுக்கு ஒவ்வாத சின்தடிக்கில் தயாரிக்கப்பட்ட உள்ளாடையை பயன்படுத்துவார்கள். இது சருமத்துக்கான காற்றோட்டத்தைத் தடுத்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மேலும் இந்த மாதிரியான உள்ளாடை ஈரப்பதத்தை உறிஞ்சுவதும் இல்லை. இதுவும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே சருமத்துக்கு ஏற்ற, உள்ளாடையைத் தேர்வு செய்ய வேண்டும்.

பெண்கள் பிறப்புறுப்பின் மீது நேரடியாக படும்படி மெல்லிய உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது கிருமிகளை நேரடியாக கொண்டுபோய் சேர்த்துவிடும்.

மேலும் பிறப்புறுப்பின் மீது காயங்களை ஏற்படுத்தி அதன் வழியாக கிருமிகள் உள்ளே செல்ல துணையாகி சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று உள்ளிட்ட சில தொற்றுக்கு காரணமாகிவிடலாம். எனவே, எது சரியானதோ, ஆரோக்கியமானதோ அதை தேர்ந்தெடுத்து அணியுங்கள்.

 

Related posts

கருவில் இருக்கிற குழந்தை ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறிகள்..

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! ஏன் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று தெரியுமா?

nathan

பீட்ரூட்டை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்…!

nathan

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?

nathan

நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்…

nathan

காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?

nathan

செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் பாதிப்புக்கள் என்ன தெரியுமா?…

sangika

இதை பயன்படுத்தி பாருங்கள் ..! கருமையான கூந்தல் வேண்டுமா..?

nathan