26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
70 2choc
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…டார்க் சாக்லேட்டின் 10 ஆரோக்கிய நன்மைகள்!!!

சாக்லேட், வயது வரம்பு இன்றி அனைவராலும் சுவைக்கப்படும் உணவாகும். சிலரால் ஓர் நாள் கூட சாக்லேட் சாப்பிடாமல் இருக்க இயலாது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பருவ பெண்கள். உங்களுக்கு தெரியுமா குறிப்பிட்ட அளவு சாக்லேட் தினமும் உட்கொள்வது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது. இது ஒரு சில சாக்லேட்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் சந்தையில் விற்கப்படும் பல சாக்லேட்டுகள் இரசாயன கலப்புகளால் தயாரிக்கப்படுகின்றன.

சாக்லேட்டில் உள்ளடங்கியுள்ள முக்கியமான ஊட்டச்சத்து கொக்கோ. சாக்லேட்டில் இருக்கும் தனித்துவமான சுவையை அளிப்பதே இந்த கொக்கோ எனும் மூலப்பொருள் தான். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் தான் சில நோய்களில் இருந்து விடுபட உதவிகிறது. சரி, சாக்லேட்டில் இருந்து நாம் பெறும் ஆரோக்கிய நலன்கள் பற்றி இனி அறியலாம்…

இதயம்

டார்க் சாக்லேட் இரத்த ஓட்டத்தை சீர்செய்ய பயனளிக்கிறது. அதனால் இதயம் நன்கு செயல்பட இது உதவுகிறது. மற்றும் சாக்லேட் இரத்தக்கொதிப்பை குறைக்கவும் பயனளிப்பதாக கூறப்படுகிறது.

மிகுதியான ஊட்டச்சத்து

சாக்லேட் விரும்பிகளுக்கான நல்ல செய்தி என்னவெனில், இதில் மிகுதியான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. சமீபத்தில் கண்டறியப்பட்ட பல ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்துள்ளன.

கொழுப்பு

சாக்லேட்டின் மூலம் நாம் அடையும் மற்றொரு சிறந்த நன்மை என்னவெனில், இது நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து உடல்நலத்தை ஆரோக்கியமடைய செய்கிறது.

மாரடைப்பு

சாக்லேட் உட்கொள்வதன் மூலமாக மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்களில் இருந்து நாம் பாதுகாப்பாய் இருக்க முடியும். முக்கியமாக இது மாரடைப்பு வரும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.

உடல் எடை குறைக்க

சாக்லேட் உண்பதன் மூலம் நீங்கள் பசி அடங்கியதாய் உணர்வீர்கள். அதன் பின்னர் நீங்கள் சிறிதளவு உணவு உட்கொள்வதன் மூலம் உங்களது உடல் எடையை வெகுவாகக் குறைக்க உதவும். இல்லை நீங்கள் சாக்லேட் உண்ட பின்னும் நிறைய உணவு உட்கொள்வதன் மூலம் எந்தப் பயனும் கிடைக்காது.

செயல் திறனை அதிகரிக்கும்

சாக்லேட் உட்கொள்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீரடைவதால் இது நமது மூளையின் செயல் திறனை அதிகப்படுகிறது. இதன் மற்றொரு பயனாய் நமது அறிவுத்திறனும் மேம்படு உதவுகிறது.

மன அழுத்தம்

தினசரி சாக்லேட் உண்பதன் மூலம் மன அழுத்தமும், பதட்டமும் குறைகிறது என உலக அளவில் கருதப்படுகிறது.

ஆன்டி- ஆக்ஸிடன்ட்

சாக்லேட்டில் இருக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் நமது உடல்நலத்தை மேம்பட வைக்க உதவுகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மிக முக்கியமான மற்றொரு பலன் நாம் சாக்லேட் மூலமாக அடைவது, இது நம்மை இளமையாக உணரவைக்கிறது.

சருமம்

சில ஆய்வுகளின் மூலம் நாம் அறிவது என்னவெனில், சாக்லேட் உண்பதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள் குறைகிறதாம். மற்றும் இது நமது முகம் பிரகாசிக்கவும் பயனளிப்பதாய் கூறப்படுகிறது.

மனக் கவலை

சோர்வாகவோ அல்லது மனக் கவலையாகவோ உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிடலாம். ஏனெனில், இது நமது மனநிலையை சீரடையத் தூண்டுகிறது. எனவே, சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் நமது மனநிலை மேலோங்கி நமது அன்றாட வேலைகளை நல்ல முறையில் செய்துமுடிக்க உதவுகிறது.

Related posts

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளையெல்லாம் நீங்க தள்ளி வச்சுடுங்க!!

nathan

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

இந்த உணவுகள் எல்லாம் ஆரோக்கியமானதா இருந்தாலும் நீங்க அடிக்கடி சாப்பிடக் கூடாது! ஏன் தெரியுமா?

nathan

வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்

nathan

புதினா இலையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?தெரிந்துகொள்வோமா?

nathan

கலப்பட சர்க்கரையை கண்டுப்பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா மரணத்தில் இருந்து காக்கும் தோங்காய் பூ!

nathan