28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்

இந்தியாவில் வீடுகளின் கிணறுகளில் தீப்பிழம்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள வீடுகளின் கிணறுகளில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி மற்றும் கூட்ட நாடு பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகளில் இவ்வாறு தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில கிணறுகளில் பெற்றோல் வாசனை வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

அதேநேரத்தில் அதிகாரிகள் இந்தப் பகுதியில் உள்ள பெற்றோல் குதங்களில் இருந்து கிணறுகளில் பெற்றோல் கலந்து இருக்கலாம், அதன் மூலமும் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

பாலக்காடு மாவட்டத்தில் கேரளாவிலேயே மிக அதிகமாக வெயில் கொடுமை அதிகரித்துள்ளது.

வெயில் கொடுமையால் ஏற்பட்ட வெப்பத்தின் விளைவாக தீ பிடித்து இருக்குமா எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையான காரணம் என்ன என்று இதுவரை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கிணற்றில் தீப்பிடித்து எரிவதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சூப்பரான முட்டை பிரை

nathan

துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து சுவையான பாயாசம்

sangika

அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!

nathan

முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்து பணியை தொடங்கிய பெண்!

nathan

சூப்பர் டிப்ஸ் ! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

nathan

ஆரோக்கியமான நகங்களை பெற, நகங்களை மென்மையானதாக்க

nathan

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

கற்றாழை நீங்கள் அறியாத ஒரு பிரச்சனைக்கு அசத்தலான தீர்வை வழங்கும்.!!

nathan

பப்பாளி பேஸ்ட் குளியல்

nathan