28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
cf61180
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள்

பழங்களின் நிறத்திற்கும், அவைகள் தரும் பலன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. குறிப்பாக மஞ்சள் நிறத்திலான பழங்கள் அதிக சத்துக்களும், சக்தியும் தருவனவாக இருக்கின்றன. அவைகள் பார்க்கவும் அழகாக இருக்கும். மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் பற்றிய விவரம்!

எலுமிச்சை வகைகள்: ஆரஞ்ச், சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவைகள் எலுமிச்சை பழ வகைகளை சேர்ந்தவை. இவைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. அதனால் இவை நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இந்த பழங்களில் சோடியம், மெக்னீஷியம், காப்பர், சல்பர், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் இருக்கின்றன. இவைகளில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் இவைகளை சாப்பிட்டால் மலச்சிக்கலும் தோன்றாது. வயிற்றுப்புண்களும் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், அஜீரண கோளாறு போன்றவைகளும் சரியாகும். சருமம், முடி வளர்ச்சி, பற்களின் ஆரோக்கியம் போன்றவைகளுக்கும் இந்த வகை பழங்கள் துணை புரிகின்றன. ஆரஞ்சு பழத்தில் குறைந்த கலோரியும், அதிக சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

மாம்பழம்: வைட்டமின் – ஏ இதில் பெருமளவு உள்ளது. வைட்டமின் -சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. கரோட்டினாய்டு போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள் இருப்பதால் புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. மாம்பழத்தில் இருக்கும் நார்ச்சத்துகள் செரிமானத் திறனை மேம்படுத்தும்.

பப்பாளி: உடலுக்கு தேவையான பெருமளவு சத்துக்கள் இதில் இருக்கின்றன. வைட்டமின், நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. என்சைம்களும் இதில் உள்ளன. கலோரி இதில் குறைவாக இருப்பது கூடுதல் சிறப்பு. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்க இதனை அதிகம் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் இளமைக்கு உத்திரவாதம் தருபவை. சரும சுருக்கங்களை போக்கி இளமையை பாதுகாக்கும். சருமத்திற்கு அதிக பொலிவையும் தரும். பப்பாளி பழத்தில் இருக்கும் பாபெயின், கைமோபாபெயின் போன்ற என்சைம்கள் எலும்புகளுக்கு பலத்தை தருகின்றன. எலும்பு அடர்த்தி குறைபாட்டிற்கும் தீர்வாக அமைகின்றன. மூட்டு நோய்கள் இருப்பவர்களும் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது.

மஞ்சள் பூசணி: பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ,சி,ஈ போன்றவை இதில் நிறைந்திருக்கிறது. இதன் விதையில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டட் பாற்றிஆசிட் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. இதயநோயாளிகளும் பூசணி விதையை சுவைக்கலாம். உடல் எடையை குறைக்கவும் இது உதவும். பூசணியில் இருக்கும் மாக்னீஷியமும், பொட்டாசியமும் கூட இதயத்திற்கு வலு சேர்ப்பதாக அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் இது துணைபுரியும். இதில் இருக்கும் செரட்டோனினுக்கு மனநலனை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது.

சோளம்: இது ருசியோடு சத்துக்களும் நிறைந்தது. கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கரோட்டினாய்டுகள், லுயூட்டின், சியாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள் சோளத்தில் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் பி 12, போலிக் ஆசிட், இரும்பு போன்றவை உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் தரும்.

வாழைப்பழம்: பொட்டாசியம், சிங்க், மக்னீஷியம் மற்றும் பல வகையான வைட்டமின்கள் இதில் உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் பி 6 இளமையை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மன மகிழ்ச்சியை உருவாக்கவும் இது உதவும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி, கொழுப்பையும் கட்டுப்படுத்தும். வயிறு, ஈரல் போன்றவைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வாழைப்பழம் முன்னிலை வகிக்கிறது.

அன்னாசிபழம்: இதில் இரும்பு, புரோட்டின், கால்சியம், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் – சி போன்றவை உள்ளன. அன்னாசி பழத்தில் இருக்கும் புரோமிலின் என்ற என்சைம் ஜீரணத்திற்கு துணைபுரிகிறது. அத்தோடு வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் போன்றவை பார்வைத்திறனை மேம்படுத்தும் சக்தி கொண்டது. இயற்கை சர்க்கரையும், சத்துக்களும் இதில் இருப்பதால் அன்னாசி பழம் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

Courtesy: MalaiMalar

Related posts

மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்

nathan

உடல் பருமனை குறைக்குமா கிரீன் டீ?அதை எவ்வாறு அருந்த வேண்டும்?

nathan

தினசரி பாலில் கொஞ்சம் பெருஞ்சீரகம் சேர்ப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

nathan

சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்!

nathan

antioxidant benefits in tamil – ஆன்டி-ஆக்ஸிடெண்ட்

nathan

ஆண்மைக் குறைவை நீக்கும் சுப்பர் மருந்து!!

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவும் அற்புதமான ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி

nathan