31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
தலைமுடி சிகிச்சை

இளநரைக்கு இயற்கை எண்ணெய்

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும்.

சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெயை தினசரி உபயோகிக்கலாம்.

கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும்.

செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

Related posts

தேகத்தில் வளரும் கேசத்தை பற்றிய சில வினோதமான தகவல்கள்!!!

nathan

பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

வழுக்கைத் தலையில் முடி வளர்ச்சியைத் தூண்டணுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

​சால்ட் அண்ட் பெப்பர்… ஹேர் ஸ்டைல் அல்ல.. குறைபாடு!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..?

nathan

உங்களுக்கு பொடுகு ஓவரா அரிக்குதா? அப்ப இத படிங்க!

nathan

உங்க முடி பொலிவாகவும் அடர்த்தியாகவும் வளர குப்பைமேனி டோனர் தயாரிப்பது எப்படி?

nathan

அழகான கூ‌ந்தலு‌க்கு ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியது

nathan

நரை முடியை வளரவிடாமல் செய்யும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்!!

nathan