25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் மட்டுமல்லாது மனமும் வலிமை அடைகிறது. உடலும் மனமும் ஒருமுகமாவதற்கு உடற்பயிற்சி உதவுகிறது. கணினியின் முன் மணிகணக்கில் வேலை பார்க்கும் நமக்கு சோம்பேறித்தனமாது உடன் பிறப்பு போல் ஒட்டிக்கொண்டுள்ளது. நமது அன்றாட வாழ்வில் தற்போதைய நிலையில் நாம் மார்க்கெட் செல்ல கூட வெளியில் செல்வதில்லை அனைத்தும் டோர் டெலிவரி ஆகிவிட்ட நிலையில் சோம்பேறித்தனம் மட்டும் தான் மிஞ்சியுள்ளது.

 

இதை சரி செய்ய தினசரி நாம் உடற்பயிற்சி செய்வதென்பது அவசியம் ஆகும். இதன் மூலம் நமது சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வு பெற இயலும். ஓர் கணக்கெடுப்பின் மூலம் நமக்கு தெரியவருவது என்னவெனில் உடற்பயிற்சி செய்யாதவர்களை விட உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக நாள் உயர் வாழ்கின்றனர் என்பதே ஆகும். ஆதலால் நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக நாம் அடையும் பல்வேறு பயன்களை தெரிந்துக் கொள்ள மேலும் படியுங்கள்…

 

உடற்பயிற்சி செய்வதன் மூலமாக கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறலாம். அதனால் தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் ஆகும்.

உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வு குறைவதினால் நாம் தினசரி செய்யும் வேளைகளில் அதிகளவில் ஈடுபட முடியும். அதனால் நமது உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.

வாழ்நாள் அதிகரிக்க..

உடற்பயிற்சி செய்வதன் முக்கிய காரணம் என்னவெனில் நமது வாழ்நாள் அதிகரிக்க இது உதவுகிறது. உடலும் மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது. அதனால் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள்.

தசைகளை வலுவடைய செய்கிறது

வழக்கமாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையற்ற கொழுப்பு கரைந்து நமது தசைகள் வலுப்பெறுகின்றன.

ஞாபக சக்தி அதிகரிக்கிறது

உடற்பயிற்சி செய்வதன் காரணமாக மூளையில் புதிய செல்கள் வளர தூண்டுகிறது. இதன் மூலம் நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

இளமையாக காட்சியளிக்க..

வழக்கமாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் அடைவது மட்டுமில்லாது, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது. அதனால் தவறாது தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தை குறைக்கிறது
மன அழுத்தத்தை குறைக்கிறது
பல்வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வீட்டிலும் நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும். உடற்பயிற்சி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

வழக்கமாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் வலுவடைய செய்யலாம். இதன் மூலம் நமது உடல் பன்மடங்கு ஆரோக்கியம் அடைகிறது .

பசியின்மை சரியாகும்

உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அதிக பசி ஏற்படும் இதன் மூலம் நமது பசியின்மை கோளாறு சீராகும்.

செரிமானத்திற்கு நல்லது

தேவையற்ற கொழுப்பை குறைப்பது மட்டுமில்லாது நமது செரிமான கோளாறுகளையும் சீரடைய செய்கிறது உடற்பயிற்சி.

கொழுப்பை சீரமைக்கும்

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை சீரமைக்கிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்துக்களையும் சரி செய்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

தவறாது உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இயலும் என பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை நோய்

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் டைப் 2 நீரழிவு நோயின் அபாயத்தை 50 முதல் 60 சதவீதம் கட்டுப்படுத்த முடியும்.

பொலிவுறும் மேனி

வழக்கமாக உடற்பயிற்சி செய்பவதன் மூலம் பொலிவான மேனியைப் பெறலாம். எனவே தவறாது தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

இதயத்திற்கு வலிமை அளிக்கிறது

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் வலிமை அடைவதால், அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் மிக குறைவாகவே ஏற்படுகிறது. எனவே, இதயம் சார்ந்த நோய்களில் இருந்து விடுப்பட தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்.

உயரமாக..

உடற்பயிற்சி செய்வதின் முக்கிய பயன்களில் ஒன்று உயரமடைவது. தவறாது தினசரி உடற்பயிற்சி செய்வதின் மூலம் உயரமாக வளர முடியும்.

கலோரிகளை எரிக்கிறது

உடலில் தங்கி கொழுப்பாக மாறும் தேவையற்ற கலோரிகளை உடற்பயிற்சி செய்வதின் மூலம் எரிக்க இயலும். இதனால் உடல்நலம் ஆரோக்கியமடையும்.

புற்றுநோயிலிருந்து காக்கிறது

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில் நமது மேற்கத்திய உணவு பழக்க வழக்கங்களினால் பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இந்நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.

எலும்புகளை வலிமையடைய செய்கிறது

மற்றொரு முக்கிய காரணம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது எலும்புகள் வலிமை அடைகிறது.

முதுகு வலி

முதுகு வலி உள்ளவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் வலுவடைவதின் காரணமாய் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு. உடற்பயிற்சி செய்பவர்களோடு உடற்பயிற்சி செய்யாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு அதிகமாய் மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே, தவறாது தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நல்ல உறக்கம்

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுவதால் சோர்வு குறையும். இதன் பயனால் இரவு நேரங்களில் உறக்கமின்மை குறைந்து நன்றாக உறங்கலாம்.

அந்தரங்க வாழ்க்கை

நன்றாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆண்களுக்கு விறைப்பு தன்மை அதிகரிப்பதால், உங்களது அந்தரங்க வாழ்க்கையிலும் மேன்மை ஏற்படும்.

மாதவிடாய்

உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் நாட்கள் தள்ளி போகும் பிரச்சனைகள் குறைகின்றன.

Related posts

வீட்டுக்குறிப்புகள்!

nathan

உங்க ராசிப்படி உங்க காதலிக்கு உங்கள பிடிக்காம போக காரணம் என்னவா இருக்கும் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உச்சக்கட்ட பேரதிர்ஷ்டம்! 2023 வரை பணமழையில் 3 ராசிகள்

nathan

பெற்றோர் கட்டாயம் இதை படியுங்கள்..`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..!’

nathan

இந்த 5 ராசி ஆண்கள் மனைவிக்கு எப்போதும் அடங்கிப்போவார்களாம்…தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

உங்களது குழந்தையின் தோல் நிறத்தை சிவப்பாக மாற்றுவதற்கு இந்த 10 எளிய முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

nathan

சூப்பர் டிப்ஸ்! சளி காய்ச்சலுக்கான அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களை அழிக்கும் அன்றாட 10 பழக்கவழக்கங்கள்!!!

nathan

இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா?

nathan