32.3 C
Chennai
Wednesday, Jul 9, 2025
04 elephant yam stir fry
சமையல் குறிப்புகள்

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கு தான் பிடிக்கும். அதேப் போல் சேனைக்கிழங்கிழங்கின் சுவைக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சேனைக்கிழங்கை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே அலாதியானது.

இங்கு அந்த சேனைக்கிழங்கு பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

Elephant Yam Stir Fry
தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 1 1/2 கப் (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
சாம்பார் பொடி – 1 1/2 டீஸ்பூன்
சோம்பு பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
புளி – 1 சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் புளியை சுடுநீரில் 30 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, அத்துடன்
சேனைக்கிழங்கை சேர்த்து அடுப்பில் வைத்து, சேனைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கு, சாம்பார் பொடி, சோம்பு பொடி மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். எப்போது பச்சை வாசனையானது போகிறதோ, அப்போது அதனை இறக்கினால், சேனைக்கிழங்கு பொரியல் ரெடி!!!

Related posts

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

nathan

சூப்பரான கரும்புச்சாறு பொங்கல்!….

sangika

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பிரெட் போண்டா!…

sangika

சூப்பர் டிப்ஸ்! மைசூர் மசாலா தோசை செய்ய ஈசியான வழி !!ட்ரை பண்ணி பாருங்க !!

nathan

மொறுமொறுப்பான பன்னீர் பாப்கார்ன்

nathan

“நீங்க உங்கள் சமையலறையில் (Plastic Cutting Board) பிளாஸ்டிக் கட்டிங் போட் ஐ வைத்து தான் காய்கறிகளை வ…

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan

சூப்பரான செட்டிநாடு பால் பணியாரம்

nathan

சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் வெங்காயத் துவையல்….

sangika