34.1 C
Chennai
Sunday, May 18, 2025
82f03271c2
அழகு குறிப்புகள்

சுவையான புலாவ் செய்வது எப்படி? ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும்…

பாஸ்மதி ரைஸ் கொண்டு செய்யப்படும் எந்த வகையான உணவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதிலும் இந்த வகையான ஒரு டிஷ் செய்து பாருங்கள். இதற்கு அதிக பட்சம் ஒரே ஒரு குடை மிளகாய் இருந்தாலே போதும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ளவோம்…

தேவையான பொருட்கள்

பெரிய குடை மிளகாய் – ஒன்று, பாஸ்மதி ரைஸ் – 300 கிராம், சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, பூண்டு – 10 பற்கள், காய்ந்த மிளகாய் – நான்கு, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

செய்முறை விளக்கம்

முதலில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை கழுவி நல்ல தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

கொதிக்கும் உலையில் பாஸ்மதி அரிசியை போட்டு 10 நிமிடத்தில் அடுப்பை அணைத்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள். பாசுமதி அரிசி எந்த அளவிற்கு உதிரி உதிரியாக இருக்கிறதோ! அந்த அளவிற்கு சாதமும் ருசியாக அமையும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் அடிக்கணமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு கறிவேப்பிலையை கழுவி உருவி போட்டு விடுங்கள்.

அதன் பின்னர் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். வெங்காயம் அதிகம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியமில்லை. பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்குங்கள். மேலும், தக்காளி பாதி வதங்கி வந்ததும் வெட்டி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அதற்கிடையில் உரித்து வைத்துள்ள பூண்டு பத்து பல் மற்றும் காம்பு நீக்கிய காய்ந்த மிளகாய் 4 ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் லேசாக தெளித்து அரைத்தால் போதும். அதிகம் தண்ணீர் சேர்த்து விடக்கூடாது. அரைத்த இந்த விழுதை குடை மிளகாய் உடன் சேர்த்து கலந்து விடுங்கள்.

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். காய்கறிகள் வெந்து வந்ததும், மசாலாவின் பச்சை வாசம் போனதும் உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அரிசி உடைந்து விடக் கூடாது. அந்த அளவிற்கு பக்குவமாக எல்லா இடங்களிலும் கலவை படும்படி மேலே தூக்கி போட்டு டாஸ் செய்யுங்கள் அல்லது நன்கு கலந்து விடுங்கள்.

பிறகு விருப்பத்திற்கு ஏற்ப மல்லித்தழை தூவி சூடாகப் பரிமாற வேண்டியது தான். அற்புதமான சுவையுடன் கூடிய இந்த குடைமிளகாய் புலாவ் உடன் தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை.

Related posts

பளபள உதடுகள் பெற.

nathan

வேலைக்கு செல்லும் பெண்களே! கூந்தலை இவ்வாறு அழகு படுத்தி கொள்ளுங்கள்…

sangika

ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை…..

sangika

உடல் நாற்றம்… எப்படித் தவிர்க்கலாம்?

nathan

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை சுவேதாவா இது! நீங்களே பாருங்க.!

nathan

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க உதவும் டோமோட்டோ ஃபேஸ்பேக்!

nathan

துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து சுவையான பாயாசம்

sangika

வாய் புண்ணை சீக்கிரம் குணமாக்க எளிய வைத்தியம்!…

nathan