31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
0.668.160.90
சரும பராமரிப்பு

உங்களுக்கு மின்னும் சருமம் வேண்டுமா? அப்ப இத படிங்க!

தேங்காய் எண்ணையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது.

இது சரும அழகிற்கு மிகவும் உதவி புரிகின்றது. முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகின்றது.

அதுமட்டுமின்றி இதில் தயாரிக்கப்படும் ஃபேஸ் வாஷ் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் கொண்டது. இதனால் முகம் பளபளப்பாக மாறுகின்றது.

தற்போது இந்த அற்புத ஃபேஸ் வாஷை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
தேயிலை மர எண்ணெய் – 2-3 துளிகள்
லாவெண்டர் எண்ணெய் – 2 துளிகள்
தேன் -1 டீ ஸ்பூன்

செய்முறை

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு எண்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை.

முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.

இப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.0.668.160.90

Source :lankasri

Related posts

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

ஆரோக்கியமான சருமத்தை பெற – Leaves that gives healthy skin

nathan

30 களில் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க இதையெல்லாம் செஞ்சு பாருங்க !!

nathan

எண்ணெய் பசை சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்

nathan

உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரியுமா…?

nathan

பெண்கள் செய்யக்கூடாத தவறுகள்!

nathan

இந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்!! எவையென்று தெரிஞ்சுக்கனுமா?

nathan

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்

nathan