25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
336 1 sleep3
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் படுக்கும் முன் இதை செய்தால் கூந்தல், சருமம் பாதிக்கும்

Courtesy: MalaiMalar அழகாக திகழ வேண்டுமெனில், இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் அதிகம் இருப்பதால், வீட்டிற்கு சென்றதுமே, கைக்கால்களைக் கூட கழுவாமல், அப்படியே சாப்பிட்டு, தூங்கிவிடுவோம். ஆனால் பெண்களை எடுத்துக் கொண்டால், இரவில் படுக்கும் முன் பல்வேறு பராமரிப்புக்களை தங்களின் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கொடுப்பார்கள்.

அதனால் தான் அவர்களுக்கு சருமம் மற்றும் கூந்தலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. இருப்பினும் நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.

சில பெண்கள் இரவில் படுக்கும் போது முடியை விரித்துப் போட்டு, அதன் மேல் தூங்குவார்கள். இப்படி முடியின் மீது நாம் தூங்கினால், உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேறு முடி சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்

இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆல்கஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

சிலர் தூங்கும் போது குப்புற படுப்பார்கள். அப்படி குப்புறப் படுத்தால், சருமம் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களைப் பெறும். எனவே நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ படுக்க பழகுங்கள்.

பகலில் தான் அலுவலகத்தில் ஏசியில் இருந்து சாகிறீர்கள் என்றால், இரவில் கூடவா ஏசி வேண்டும். இப்படி எந்நேரமும் ஏசியிலேயே இருந்தால், சரும செல்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, எப்போதும் ஏசியில் இருப்போருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரித்து, சருமமானது முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்

எந்நேரமும் மொபைலைப் பார்த்தவாறு இருந்தால், அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் தான் காணப்படும். மேலும் இரவில் காதலி அல்லது காதலுடன் நீண்ட நேரம் போனில் மொக்கைப் போட நன்றாகத் தான் இருக்கும். ஆனால் போனின் திரை தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும். இவ்வளவு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில், நள்ளிரவு சாட்டிங்கை முதலில் நிறுத்துங்கள்.

தலையணை உறையை மாற்றாமல் இருப்பது அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், வாரம் ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதில் சேர்ந்துள்ள அழுக்குகளின் மூலமே முகத்தில் பருக்கள் மற்றும் தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும்.

Related posts

உங்க ராசி விஸ்வாச குணமுள்ள ராசியா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

நுரையீரலை வலுப்படுத்துவதில் ஆடாதொடை முக்கிய பங்கு வகிக்கின்றன!

nathan

ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. இருமலை குணப்படுத்தும் வழிமுறைகள்!

nathan

இந்த பிரச்சனை இருந்தா இளநீர் குடிக்காதீங்க?தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டில் செல்லப் பிராணிகளால் துர்நாற்றமா? அதைப் போக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்…

nathan

அதிகம் சாப்பிட்டால் ஆபத்து… உஷார் நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

nathan

ஈஸியா தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க

nathan

பசியால் வரும் உடல்நலக்குறைபாடுகள்

nathan